Top
undefined
Begin typing your search above and press return to search.

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழன்! நாசாவின் படங்களை ஆய்வு செய்து அசத்தினார்!

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழன்! நாசாவின் படங்களை ஆய்வு செய்து அசத்தினார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 7:28 AM GMT


நிலவின் பெண் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. அதனுடன் விக்ரம் லேண்டரையும் அனுப்பி வைத்தது. சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. ஆனால் சந்திரயான்-2 இல் இருந்து பிரிந்து சென்று நிலவின் தென் பகுதியில் தரை இறங்கிய விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தனது பணியை செய்யவில்லை. தரை இறங்கியபோது அதனுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து மீண்டும் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் விக்ரம் லேண்டரை தேடும் பணியை கைவிட்டது இஸ்ரோ.


இந்த நிலையில், அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் நிலவின் தென் பகுதியில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.


நிலவில் தென்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வந்தது. இதில் செப்டம்பர்-17, அக்டோபர்-14, 15 நவம்பர்-11 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட படங்களை, சென்னையை சேர்ந்த மென்பொருள் வல்லுநர் சண்முக சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் அந்தப் புகைப்படத்தின் மூலம் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து, நாசாவுக்கு தெரிவித்து உள்ளார். சண்முக சுப்பிரமணியனின் ஆய்வை மீண்டும் ஆய்வு செய்த நாசா விஞ்ஞானிகள், அவர் செய்த ஆய்வு சரியானது என்பதை உறுதி செய்தனர். அதோடு விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து அதனை நாசாவுக்கு தெரியப்படுத்திய சண்முக சுப்பிரமணியனுக்கு நாசா நன்றி தெரிவித்துள்ளது.


சண்முக சுப்பிரமணியன் சென்னையிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story