Top
undefined
Begin typing your search above and press return to search.

ஈரான் நாட்டு ஜெயிலில் வாடிய 3 தூத்துக்குடி மீனவர்கள் மீட்பு! மோடி அரசின் தொடர் முயற்சியால் வீடு திரும்புகின்றனர்!

ஈரான் நாட்டு ஜெயிலில் வாடிய 3 தூத்துக்குடி மீனவர்கள் மீட்பு! மோடி அரசின் தொடர் முயற்சியால் வீடு திரும்புகின்றனர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 11:31 AM GMT


தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் இருதயராஜ், கிரீட்வின், பிரதீப் ஆகிய 3 பேரும், சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த ஜாபர் அல்ப்கனுக்கு சொந்தமான மீன்பிடி கப்பலில் பணியாற்றி வந்தனர். இவர்கள் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றபோது, ஈரான் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஈரான் நாட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


இவர்களை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்காக அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முயற்சிகளை மேற்கொண்டார்.


நரேந்திர மோடி அரசின் தொடர் முயற்சியின் காரணமாக 3 தூத்துக்குடி மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று இந்தியா அழைத்துவரப்பட்டனர்.


இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இருதயராஜ், கிரீட்வின், பிரதீப் ஆகிய 3 பேரும் ஈரான் நாட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர். தெக்ரானில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை மூலம் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக3 மீனவர்களும் மீட்கப்பட்டு இன்று இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/MOS_MEA/status/1201774185028014080


மீட்கப்பட்டுள்ள 3 தூத்துக்குடி மீனவர்களும் இன்று அவர்களின் வீட்டிற்கு வந்து சேருவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story