Top
undefined
Begin typing your search above and press return to search.

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவதில் சிறப்பாக செயலாற்றி, அதிக கடன் வழங்கியதன் அடிப்படையில் தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது!

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவதில் சிறப்பாக செயலாற்றி, அதிக கடன் வழங்கியதன் அடிப்படையில் தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2019 4:51 AM GMT


மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நேற்று நடந்த மாற்று திறனாளிகள் தின விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகளை வழங்கினார்,தமிழக மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதில், சிறப்பாக செயலாற்றி, அதிக கடன் வழங்கியதன் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, இதன் அடிப்படையில் சிறந்த மாநிலம் மற்றும் தமிழகத்தில் சிறந்த மாவட்டத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இதற்கான விருதை வழங்க தமிழக அரசு சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விருதைப் பெற்றுக்கொண்டார்.



மேலும் இதில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு உதவிய,சிறப்பாக சேவை புரிந்த தர்மபுரி மாவட்டத்திற்கு சிறந்த மாவட்டத்திற்கான விருதும் வழங்கப்பட்டது,இந்த விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் இருந்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி பெற்றுக்கொண்டார்.


Next Story