Top
undefined
Begin typing your search above and press return to search.

ப.சிதம்பரத்துக்கு இன்று ஜாமீன் வழங்கியது கோர்ட்! வழக்குகள் குறித்து வெளியே வாய் திறக்கக் கூடாது என நிபந்தனை!

ப.சிதம்பரத்துக்கு இன்று ஜாமீன் வழங்கியது கோர்ட்! வழக்குகள் குறித்து வெளியே வாய் திறக்கக் கூடாது என நிபந்தனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2019 7:47 AM GMT



ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் அமலாக்கத்துறை உடனே கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து 105 நாட்களாக அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட முயற்சிக்குப் பின் இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


அப்போது நீதிபதிகள் நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன் மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை விடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்று நிபந்தனைகள் விதித்தனர்.


அந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதை அடுத்து ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து தனது சிறை வாழ்க்கையிலிருந்து அவர் கொஞ்ச நாளைக்கு அவர் ரிலாக்ஸ் ஆவதாகக் கூறப்படுகிறது.


Next Story