Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜெயலலிதா உத்தரவுப்படி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுக்கொடுப்பது உண்மைதான்! திமுகவினருக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்!

ஜெயலலிதா உத்தரவுப்படி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுக்கொடுப்பது உண்மைதான்! திமுகவினருக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2019 10:52 AM GMT


உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.


இந்த நிலையில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உள்பட பல மொழிகள் கற்று தரப்படுகிறது எனவும் இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில் அளித்தார்.


கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரஞ்சு மற்றும் இந்தி மொழி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல, இது விருப்ப பாடம் தான். இந்தியை அரசு திணிக்க வில்லை, தமிழ் என்பதுதான் தமிழக அரசின் உயிர் மூச்சு.


இந்தி பிரசார சபாவில் இருந்து நேரடியாக வந்து பயிற்சி அளிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு இந்திய மொழி, ஒரு உலக மொழி ஆகியவற்றில் பயிற்சி அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். மாணவர்களே விருப்பப் பாடத்தை எழுதி கொடுத்து இந்தி உட்பட பிடித்த மொழியை தேர்வு செய்கிறார்கள் என கூறினார்.


Next Story