Top
undefined
Begin typing your search above and press return to search.

தொடர் மழையால் முழுக் கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி! சுற்று கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர் மழையால் முழுக் கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி! சுற்று கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2019 8:54 AM GMT


மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி நீர் தளும்பி கோடிக்கரை வழியே வழியும் நிலையில் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பி வழிவதால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் அதைக் காண அருகே செல்கிறார்கள். ஆனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பாது காப்புக் கருதி போலீஸ் காவல் அங்கு போடப்பட்டு பார்வையாளர்களுக்கும் தடை போடப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக முழு கொள்ளவை எட்டி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 23.3 அடி. தற்போது ஏரியில் 22.4 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரி முழு கொள்ளளவை எட்டி வழியும் நிலையில் இருப்பதால் ஏரியின் கரையோர பகுதியான முள்ளி, வளர்பிறை, விழா மங்கலம் புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story