Top
undefined
Begin typing your search above and press return to search.

திட்டக்குடி வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரில் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர்!

திட்டக்குடி வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரில் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2019 7:36 AM GMT


திட்டக்குடி வெள்ளாற்றில் பல வருடங்களாக வறண்டு கிடந்தது. இதனால் திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருந்தது. சில நாட்களாக பெய்த மழையால் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வெள்ளாற்றில் திறந்துவிடப்பட்ட உபரி நீர் வெள்ளாற்றில் செல்கிறது.


நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் ஆற்றில் வருவதை திட்டக்குடி மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்து விவசாயிகள் மக்களுக்கும் மகிழ்ச்சியோடு வசித்து செல்கின்றனர்.







இந்நிலையில் திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் திட்டக்குடி பேரூராட்ச்சிக்கு உட்ப்பட்ட பகுதிகளில் இருந்து சுத்தம் செய்யப்பட்ட குப்பை கழிவுகளை வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரில் கொண்டுவந்து லாரியில் கொட்டுகின்றனர்.


இதனால் தண்ணீர் மாசுபடுவது மட்டும் இல்லாமல் அந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் மற்றும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உறுவாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆற்றில் குப்பை கழிவுகளை கொட்டும் பேரூராட்ச்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story