Kathir News
Begin typing your search above and press return to search.

3.7 ஏக்கர் நிலத்தில் ரூ.611 கோடியில் உருபெறும் பிரம்மாண்டம் - வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மத்திய அரசின் மாபெரும் திட்டம்.!

3.7 ஏக்கர் நிலத்தில் ரூ.611 கோடியில் உருபெறும் பிரம்மாண்டம் - வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மத்திய அரசின் மாபெரும் திட்டம்.!

3.7 ஏக்கர் நிலத்தில் ரூ.611 கோடியில் உருபெறும் பிரம்மாண்டம் - வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மத்திய அரசின் மாபெரும் திட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2019 10:39 AM GMT


பிரகதி மைதானத்தில் 3.7 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குத்தகை அடிப்படையில் மாற்றித் தர ஐ.டி.பி.ஓ.-வுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது


நவீன வசதிகளுடன் 5 நட்சத்திர ஓட்டலைக் கட்டுவதற்கும், நடத்துவதற்கும் ஐ.டி.டி.சி., ஐ.ஆர்.சி.டி.சி. ஆகியவற்றால் இந்த நோக்கத்திற்கான சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது


ஓட்டல் வசதி ஐ.இ.சி.சி. திட்டத்திற்கு மதிப்பினைக் கூட்டுவதாக இருக்கும். மேலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான உலக மையமாகவும் இந்தியாவை மேம்படுத்தும்


‘இந்தியாவில் உற்பத்தி’, ‘திறன் இந்தியா’, ‘முதலீடு இந்தியா’ போன்ற பல்வேறு முக்கியமான முன்முயற்சிகளைக் கொண்ட சிறப்புமிக்க சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சிக்கு ஊக்கமளிக்கும்


ஐ.இ.சி.சி. திட்டத்தின் அமலாக்கம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு 2020-21-ல் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3.7 ஏக்கர் நிலத்தை ரூ.611 கோடி என்ற தொகைக்கு 99 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குத்தகை அடிப்படையில் மாற்றித் தர இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ஐ.டி.பி.ஓ.)-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


உலக அளவிலான கூட்டங்கள், முன்முயற்சி செயல்கள், மாநாடுகள், கண்காட்சிகள் போன்றவை வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான உலக மையமாகவும் இந்தியாவை மேம்படுத்தும். ஓட்டல் வசதி ஐ.இ.சி.சி. திட்டத்திற்கு மதிப்பினைக் கூட்டுவதாகவும் இந்தியத் தொழில் வர்த்தகத்திற்குப் பயனுடையதாகவும் இருக்கும்.


மேலும் பிரகதி மைதானத்தில் செய்யப்படும் இந்த மாற்றம் ஆண்டுதோறும் சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள், சிறு வர்த்தகர்களுக்கும் பயன்தரும். அதிகரிக்கப்படும் நவீன வசதிகள், பங்கேற்கின்ற வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குப் பெரும் பயனாக இருக்கும். வர்த்தகக் கண்காட்சிக்கு வருகை தருவோர் எண்ணிக்கை அதிகரிப்பதையும் இது உறுதி செய்யும். தங்களின் வர்த்தகப் பகுதிகளை விரிவுபடுத்தவும், இந்திய சரக்குகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தவும் ஊக்கமளிக்கும் இடமாகவும் இது இருக்கும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News