Kathir News
Begin typing your search above and press return to search.

கிராமப்புற வேலை உறுதித் திட்டம் இந்தாண்டு கூலி ரூ.229 ஆக நிர்ணயம் - எதெந்த மாநிலங்கள் டாப் லிஸ்டில்..?

கிராமப்புற வேலை உறுதித் திட்டம் இந்தாண்டு கூலி ரூ.229 ஆக நிர்ணயம் - எதெந்த மாநிலங்கள் டாப் லிஸ்டில்..?

கிராமப்புற வேலை உறுதித் திட்டம் இந்தாண்டு கூலி ரூ.229 ஆக நிர்ணயம் - எதெந்த மாநிலங்கள் டாப் லிஸ்டில்..?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2019 11:59 AM GMT


மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2019- 2020 நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி விவரங்களை மாநில வாரியாக மத்திய அரசு அளித்துள்ளது.


மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் அளித்த பதில்களின்படி, 2019-20 ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலையுறுதித் திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி ரூ.229 எனத் தெரிய வந்துள்ளது.


மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டக் கூலி தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, இச்சட்டத்தின் -பிரிவு6(1)- ன்படி கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் வழங்க வேண்டிய ஊதிய விகிதங்களை தீர்மானித்து அறிவிக்கிறது எனக் குறிப்பிட்ட அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், ஒவ்வோராண்டும் விவசாயத்தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை புள்ளிகள் அடிப்படையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்கிறது.


ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1 முதல் இந்த புதிய ஊதிய விகிதங்கள் அமலுக்கு வருகிறது என்றும் விளக்கினார். 2019- 20 ஊதிய விகிதங்களின்படி அதிகபட்சமாக ஹரியானா ரூ.284, கேரளா ரூ.271 அளிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News