Top
undefined
Begin typing your search above and press return to search.

629 பாகிஸ்தான் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிய சீனர்கள்! தட்டிக்கேட்க திராணியில்லாத பாகிஸ்தான்!

629 பாகிஸ்தான் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிய சீனர்கள்! தட்டிக்கேட்க திராணியில்லாத பாகிஸ்தான்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2019 6:44 AM GMT


பாகிஸ்தானிலிருந்து இளம் பெண்களை சீனாவுக்கு கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக பல தன்னார்வலர்கள் தொடர்ந்து புகார்களை எழுப்பி வந்தனர்.


இந்தநிலையில் பாகிஸ்தானிலிருந்து 629 பெண்கள் சீனாவிற்கு கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள இளம் பெண்களை சீனர்கள் போலி திருமண நாடகத்தை அரங்கேற்றி, சீனாவிற்கு கடத்தி சென்று விபச்சாரத்தில் தள்ளியது தெரியவந்துள்ளது.


இப்படி சீனாவிற்கு கடத்தப்பட்ட பெண்கள், பின்னர் தனது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவர்களை அடிமைப் படுத்தி வைத்துள்ளனர்.


இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க திராணியில்லாமல் அமைதி காத்து வருகிறது‌. பாகிஸ்தான் பெண்களை திருமணம் எந்த பெயரில் ஏமாற்றி சீனாவிற்கு அழைத்து சென்று விபச்சாரத்தில் தள்ளிய சீனர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அது பாகிஸ்தான் - சீன உறவை பாதிக்குமாம். அதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.


எனவே ஏழ்மை நிலையிலுள்ள பாகிஸ்தான் பெண்களை சீனர்கள் திருமணம் என்ற போர்வையில் கடத்தி சீனாவிற்கு கொண்டு சென்று விபச்சாரத்தில் தள்ளுவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களை சட்டம் எதுவும் செய்யாது என்ற துணிச்சலால், சீனர்கள் தொடர்ந்து இதை செய்து வருகின்றனர்.


Next Story