Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.கவிலிருந்து ஆட்களை இழுக்கும் நிலைக்கு, தி.மு.க கரைந்து போய்விட்டது! பா.ஜ.க அசைக்கமுடியாத சக்தியாக எழுந்து நிற்கிறது!

பா.ஜ.கவிலிருந்து ஆட்களை இழுக்கும் நிலைக்கு, தி.மு.க கரைந்து போய்விட்டது! பா.ஜ.க அசைக்கமுடியாத சக்தியாக எழுந்து நிற்கிறது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2019 9:25 AM GMT


பாஜக மாநில துணைத் தலைவராக இருந்தவர் அரசகுமார். இவர் சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் வானளாவ புகழ்ந்து தள்ளினார். அப்போது ஆவர், திமுகவில் விரைவில் இணைய உள்ளதையும் சூசகமா வெளிப்படுத்தினார்.


இதன் பின்னணியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கை இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தமிழகத்தை 5 முறை ஆண்ட கட்சியான திமுக, ஸ்டாலின் தலைமையில் தேய்ந்து, கரைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் திமுக தலைவர் ஸ்டாலினும், 2ஜி புகழ் ஆ.ராசா போன்ற தலைவர்களும் தொடர்ந்து இந்து தெய்வங்களையும், இந்து மத வழிபாட்டு முறைகளையும், இந்துக்களையும் கேவலமாக பேசி வருவதுதான் என்று ஸ்டாலின் நம்புகிறார். அதே நேரம் தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.


“பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம், தமிழகத்தில் பாஜக வளரவில்லை” என்றெல்லாம் வசைபாடி வந்த திமுக, இன்று பாஜகவினரை திமுகவிற்கு இழுக்கும் வேலையில்ஈடுபட்டு உள்ளது. அதாவது பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து உள்ளது என்பதை ஸ்டாலின் முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறார். அதேநேரம் திமுக கரைந்து காணாமல் போய் வருகிறது என்பதையும் அவர் ஒத்துக் கொள்கிறார்.


ஆகவேதான் பாஜகவினரை திமுகவிற்கு இழுக்கும் நிலையில் திமுக மேலிடம் திட்டமிட்டு களப் பணியாற்றி வந்துள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது. அதோடு இந்துக்களின் ஓட்டுக்களைப்பெற, பாஜகவினரை திமுகவின் பக்கம் இழுப்பதுதான் ஒரேவழி என்ற முடிவிற்கு, திமுக மேலிடம் வந்துள்ளது.


இதன் ஒரு கட்டமாக பி.டி.அரசகுமாரை, நல்ல விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். அவர்களின் திட்டப்படி அரசகுமார், திமுகவிடம் விலை போய் விட்டதால், அதனை வெளிப்படுத்தும் விதமாக புதுக்கோட்டை திருமண மேடையை அவர் பயன்படுத்திக் கொண்டார். இன்று அவர் முறைப்படிஅறிவாலயம் சென்று முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.


ஆனால் கடந்த காலத்தைப் போன்று இந்துக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. என்பது ஸ்டாலினுக்கு தெரிய வாய்ப்பில்லை. வருகின்ற தேர்தல்களில் இதை அவர் உணர்ந்துகொள்வார் என்கின்றனர் பாஜக தொண்டர்கள்.


பாஜகவிலிருந்து துரோகி ஒருவர் வெளியேறி திமுகவில் சேர்ந்து உள்ளது பாஜக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story