Top
undefined
Begin typing your search above and press return to search.

தோல்வியின் தோளில் ஏறி வெற்றி கண்டவர் - யாரிந்த ஆப்ரஹாம் லிங்கன்..??

தோல்வியின் தோளில் ஏறி வெற்றி கண்டவர் - யாரிந்த ஆப்ரஹாம் லிங்கன்..??

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2019 1:59 AM GMT


நீங்கள் எத்தனை
நாட்கள் அல்லது வாரங்கள் தோல்வி அடைந்திருக்கீறீர்கள்?


தொடர் தோல்வியால்
எத்தனை முறை சோர்ந்து போயிருக்கீறீர்கள்?


என்று நம்மை யாரவது
கேட்டால் நம்மிடம் ஏராளமான பதில்கள் இருக்கும். ஆனால் இந்த கேள்விக்கான பதிலை
கூறும் முன் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய சுவரஸ்யமான தகவல் ஒன்று உண்டு.


ஒரு குறிப்பிட்ட ,மனிதரின்,
வாழ்க்கைப் புத்தகத்தில் வெறும் தோல்விகள்
மட்டுமே அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் தோல்வியின்
தோளிலேறி அலட்சியமாகப் பயணம் செய்தார். மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில்
கூறும் முன், அவர் வெற்றிப் பாதை
உங்கள் பார்வைக்கு:


1831 - வணிகத்தில் தோல்வி


1832 - தேர்தலில் தோல்வி


1833 - மீண்டும்
வணிகத்தில் தோல்வி


1834 - தேர்தலில் வெற்றி


1835 - மனனவி மரணம்


1836 - நரம்பு தளர்ச்சி


1838 - சபாநாயகர்
போட்டியில் தோல்வி


1843 - நில அதிகாரி
போட்டியில் தோல்வி


1843 - கட்சியில்
தோற்கடிக்கப்பட்டார்


1846 - கட்சியில் வெற்றி


1848 - மறு தேர்தலில்
தோல்வி


1855 - செனட் உறுப்பினர்
தேர்தலில் தோல்வி


1856 - துணை அதிபர்
தேர்தலில் தோல்வி


1860 - அதிபர் தேர்தலில்
வெற்றி


யார் இவர்??


இவர் ஒரு சாதாரண
மனிதர் , தனக்கு சாதகமில்லாத
சூழல்களை வாழ்நாளில் ஏற்க மறுத்தவர். வலிகள் தாங்கிய மனிதராக மட்டும் இல்லாமல்
வலிமையான மனிதராக வாழ்ந்தவர். இவர் முயற்சிகளை முட்டாள்தனம் என்று ஏளனம்
செய்தவர்களின் கருத்துக்களை உதறிதள்ளியவர். "வெற்றி" அவர் பாதையில் வர
மறுத்த போது தோல்விகளோடு மட்டுமே நின்று விடாதவர். எளிதாக சொன்னால், எதை பற்றியும் கவலை படாமல் தன் இலக்குளில் மட்டும்
இருக்கமாக இருந்தவர்.


யார் இவர்??
ஆப்ரகாம் லிங்கன்.


வாழ்வில் தவறும்
இடத்திலெல்லாம், நின்று விளக்கம்
சொல்வதை விட்டுவிட்டு. அடுத்த நிலைகளை நோக்கி நகர்பவர்களே வெற்றியாளராகிறார்கள்.
எந்த குழந்தையும் நடைபயில்கையில் மனம் தளர்வதில்லை மாறாக கற்றுக் கொள்கிறது..
ஒவ்வொரு தோல்வியும், அனுபவங்களை தான்
கற்ப்பிக்கின்றது. வாழ்க்கை பயில்வதற்காகவும், வளர்வதற்காகவும் பிரத்யேகமாக உருவாக்கபட்ட களம்
என்பதை தான் ஆப்ரகாம் லிங்கனின் வெற்றித் திசைகள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன.


இப்பொழுது
கூறுங்கள்..


நீங்கள் எத்தனை
நாட்கள் அல்லது வாரங்கள் தோல்வி அடைந்திருக்கீறீர்கள்?


தொடர் தோல்வியால்
எத்தனை முறை சோர்ந்து போயிருக்கீறீர்கள்?


நிச்சயம் ஒரு முறை
கூட இல்லை என்பது தான் உங்கள் பதிலாக இருக்க வேண்டும். காரணம், நீங்கள் ஒவ்வொரு முறை தோற்கிற போதும் வெற்றிக்கான
புதிய வழியை கண்டுபிடித்திருக்கீறீர்கள்


Next Story