Kathir News
Begin typing your search above and press return to search.

விக்ரம் லாண்டார் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டதா.? இன்னும் நிலவும் குழப்பம்!

விக்ரம் லாண்டார் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டதா.? இன்னும் நிலவும் குழப்பம்!

விக்ரம் லாண்டார் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டதா.? இன்னும் நிலவும் குழப்பம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2019 2:13 AM GMT


நிலவின்
தென் துருவ நில பரப்பில் சந்திராயன் 2 விக்ரம் லண்டரின் உடைந்த பாகங்கள் சிதறிக்கிடக்கும் இடத்தை தமிழக தமிழக இளைஞர் சுட்டிக்காட்டியது மக்களிடம் இருந்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தும் இரு வேறு கருத்திக்களை ஈர்த்துள்ளது.


சென்னையில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுபவர் சுப்பிரமணியன் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையம்
நிலவை ஆராய அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் லண்டர் விக்ரம் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டில் இருந்து திடீரென்று விடுபட்டது. இந்த லண்டர் எங்கே மோதியது என்று கண்டுபிடிப்பதற்காக இஸ்ரோ நாசாவின் உதவியை நாடியது, நாசாவும் இஸ்ரயோவும் தொடர்ந்து பல நாட்களாக விக்ரம் லண்டர் மோதிய
இடத்தை தேடிக்கொண்டிருக்கையில் தமிழகத்தை சேர்ந்த சண்முக சுப்பிரமணியம் நாசாவின் 9 வருடத்திய நிலவின் புகைப்படங்களையும், தற்போது நாசா எடுத்துள்ள நிலவின் தென் துருவ புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்த்தபோது வெள்ளை புழுதிப்பாடலாம் ஒன்று
தென்பட்டது அதுவே விக்ரம் லண்டர் மோதிய இடமாக இருக்கும் என்று சுப்ரமண்யம் குறிப்பிட்டிருக்கிறார் மூன்று நாட்களாக ஒரு நாளைக்கு 8 மணிநேரம் இதை துல்லியமாக கவனித்து இதை கண்டுபிடித்துள்ளார். நாசா
இதை ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துள்ளது.


அனால்
இஸ்ரோ விஞ்ஞானியான தப்பண் மிஸ்ரா இது நிஜமாகவே லண்டர் மோதிய இடமா என்பதில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார் அவரின் கருத்துப்படி அந்த லண்டர் 800 கிலோ எடையுடன் நொடிக்கு 534 கிலோமீட்டர் வேகத்தில் சென்று தரையில் மோதியிருக்கலாம் அப்படி மோதி இருந்தால் மிகப்பெரிய பள்ளம் உண்டாகும், அது ஏற்படுத்தும் புழுதி நிலவில் ஈர்ப்பு விசை இல்லாததால் பல மடங்கு உயர கிளம்பும். அனால்
அந்த இடத்தில அது போன்று எதுவும் தென்படவில்லை மாறாக வெள்ளை படலம் மட்டுமே தென்படுகிறது


மேலும்
அந்த லண்டரில் எரிபொருள் இருந்ததால் தீப்பிடித்து இருந்திருக்கும் அதனால் அந்த இடம் கருப்பு நிறமாக தெரிந்திருக்குமே அன்றி இது ஒன்று வெள்ளை நிறமாக இருக்காது என்று கருது கிறார். என்று
கருது தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய தகவலின் படி விக்ரம் லண்டர் மோதிய இஸ்ரோ ஏற்கனவே கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கிறது. இந்திய
இந்த முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்கா ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக விண்வெளி சார்ந்த முயற்சிகளில் இடம்பெற்றிருக்கும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News