Top
undefined
Begin typing your search above and press return to search.

“இந்துமத தலைவர்கள்தான் கலவரத்தை தூண்டுகின்றனர்; மற்ற மத தலைவர்கள் நல்லவர்கள்“ – ஆந்திராவின் மு.க.ஸ்டாலின் பவன் கல்யாண் பேச்சு!

“இந்துமத தலைவர்கள்தான் கலவரத்தை தூண்டுகின்றனர்; மற்ற மத தலைவர்கள் நல்லவர்கள்“ – ஆந்திராவின் மு.க.ஸ்டாலின் பவன் கல்யாண் பேச்சு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2019 10:47 AM GMT


தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் இங்கு உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் போன்று அவ்வப்போது இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.


சமீபத்தில் திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பவன் கல்யாண், “இந்துமத தலைவர்கள்தான் கலவரத்தை தூண்டுகின்றனர். மற்ற மதங்களை சேர்ந்த தலைவர்கள் நல்லவர்கள். அவர்கள் மத கலவரத்தை ஒருபோதும் தூண்டுவதில்லை” என்று கூறினார்


இது இந்துக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.


பாஜகவும், மற்ற இந்து அமைப்புகளும் பவன் கல்யாணின் இந்த கருத்தை வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.


இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங், "பவன் கல்யாணுக்கு மதசார்பின்மை என்றால் என்னவென்றே தெரியாது. இந்து மதத்தின் அடிப்படை சித்தாந்தமே சகிப்புத்தன்மைதான். மற்ற மதங்களைப்போல அல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவது இந்துமதம் மட்டுமே. இது பற்றி தெரியாமல் பத்தாம் பசலி தனமாக, கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். அவர் இந்து மதத்தையும், இந்து மதத் தலைவர்களையும் இழிவாக பேசியதை வாபஸ் பெறவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.




https://twitter.com/TigerRajaSingh/status/1201713294320357377

Next Story