Kathir News
Begin typing your search above and press return to search.

சூடான் நாட்டில் வெடிவிபத்து இந்தியர்கள் 13 பேர் உட்பட 23 பேர் உயிரிழப்பு -பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

சூடான் நாட்டில் வெடிவிபத்து இந்தியர்கள் 13 பேர் உட்பட 23 பேர் உயிரிழப்பு -பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

சூடான் நாட்டில் வெடிவிபத்து இந்தியர்கள் 13 பேர் உட்பட 23 பேர் உயிரிழப்பு -பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2019 2:03 AM GMT


சூடான் நாட்டின் கார்டம் நகரில் மட்பாண்டம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது,இந்நிலையில் எரிவாயு நிரம்பிய லாரி ஒன்று ஆலையில் திடீரென வெடித்து சிதறியது,இதில் சிக்கி 23க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் அவர்களில் 13 இந்தியர்களும் அடங்குவர்,130க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.இதுபற்றி அந்நாட்டில் அமைந்துள்ள இந்திய தூதரகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தொழிலாளர்கள் உள்பட பலர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர் என தகவல்கள் கிடைத்து, காயமடைந்தோருக்கு தேவையான உதவிகளை,இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், 'சூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவம் நடந்துள்ள இடத்திற்கு விரைந்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் +249-921917471 என்ற உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது,இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்,பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்த அவர் இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்தியா தூதரக அதிகாரிகள் அனைத்து உதவிகளும் செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1202225406679699456

Next Story
கதிர் தொகுப்பு
Trending News