Top
undefined
Begin typing your search above and press return to search.

சூடான் நாட்டு தீவிபத்தில் பலியான 6 தமிழர்களில் கடலூரைச் சேர்ந்தவர் அடையாளம் தெரிந்தது! கிராமமே சோகத்தில் மூழ்கியது!

சூடான் நாட்டு தீவிபத்தில் பலியான 6 தமிழர்களில் கடலூரைச் சேர்ந்தவர் அடையாளம் தெரிந்தது! கிராமமே சோகத்தில் மூழ்கியது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2019 7:11 AM GMT


சூடான் நாட்டில் செராமிக் ஓடுகள் தயாரிக்கும் ஆலை ஒன்றில் 200-க்கும் அதிகமானோர் பணியாற்றி வந்தனர். இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். இவர்களில் இவர்களில் 18-பேர் இந்தியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் தமிழர்கள் என்று தெரியவந்துள்ளது.


இந்த தீ விபத்தில் பலியான 18 இந்தியர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் அவர் தனது டுவிட்டர் பதிவில், “சூடான் நாட்டில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் இந்தியர்கள் பலியான செய்தி, எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு இந்தத் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். நமது வெளியுறவுத் துறை தேவையான அனைத்து உதவிகளையும் முழுமூச்சுடன் செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1202225406679699456


இந்த நிலையில் 6 தமிழர்களில் ஒருவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.





கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மானடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருவன் மகன் ராஜசேகர் சூடான் தீவிபத்தில் பலியாகி உள்ளார். 36 வயதான ராஜசேகர், கடந்த 2017-ஆம் ஆண்டு சூடான் நாட்டின், ஹர்டோப் என்னுமிடத்திலுள்ள செராமிக் தொழிற்சாலையில் மேற்பார்வையாளர் பணி செய்து வந்தார்.





 இந்நிலையில் நேற்று முன்திம் ஏற்பட்ட எல்.பி .ஜி கேஸ் கசிவின் மூலம் ஏற்பட்ட விபத்தில் ராஜசேகரும் உயிரிழந்துள்ளார். இதனால் அவரின் சொந்த கிராமமான மானடி குப்பம் கிரமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.









கலை சுந்தரி, கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது கணவர் ராஜசேகர் உடலை உடனடியாக கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.


Next Story