Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்மித்தை போட்டு புரட்டியெடுத்த விராட்கோலி - அவருக்கு இணையாக தான் இருப்பதை நிரூபித்து கட்டினார்.!

ஸ்மித்தை போட்டு புரட்டியெடுத்த விராட்கோலி - அவருக்கு இணையாக தான் இருப்பதை நிரூபித்து கட்டினார்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2019 2:06 AM GMT


ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸி.யின் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்,வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் விராட் கோலி 136 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் 928 புள்ளிகளைப் பெற்றார்.


ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் ஸ்மித், 36 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவர் 931 புள்ளிகளில் இருந்து 923 புள்ளிகளுக்கு இறங்கினார். ஸ்மித்தை விட 5 புள்ளிகள் அதிகம் பெற்ற விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் போட்டியில் ஸ்மித்துக்கு இணையாக தான் இருப்பதை கோலி நிரூபித்துள்ளார்.


இதையடுத்து சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்தார்,இந்தியாவின் ரஹானா, தரவரிசைப் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளார். அடிலெய்ட் பகலிரவு டெஸ்டில் 335 ரன்கள் எடுத்த வார்னர், 12 இடங்கள் முன்னேறி 5-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.


Next Story