Top
undefined
Begin typing your search above and press return to search.

கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைப்பது உறுதி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன.?

கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைப்பது உறுதி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 2:22 AM GMT


கடந்தாண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது ஆனால்  காங்கிரசும் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து குமாரசாமி முதலமைச்சரானார், குமாரசாமி முதல்வராக இருந்த போது, 17 எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. 105 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தது. முதல்வராக எடியூரப்பா உள்ளார். இதனையடுத்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்து தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளனர்.காலியாக உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது இதில் 5 தொகுதிகளில் பாஜக கைப்பற்றினால் எடியூரப்பா அரசு தப்பும் இல்லை என்றால் கவிழும் நிலையில் உள்ளது, பிந்தைய தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜக அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளது.


Next Story