Top
undefined
Begin typing your search above and press return to search.

சாதாரணம் இல்ல.. தொழிற்புரட்சி காலத்தில் இருந்ததை விட இப்போது பூமியின் வெப்பம் ஒரு டிகிரி கூடுதலாக அதிகரித்துள்ளது - COP 25 மாநாட்டில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சாதாரணம் இல்ல.. தொழிற்புரட்சி காலத்தில் இருந்ததை விட இப்போது பூமியின் வெப்பம் ஒரு டிகிரி கூடுதலாக அதிகரித்துள்ளது - COP 25 மாநாட்டில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 2:34 AM GMT


பருவநிலை மாற்றத்தை குறித்து ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர்த்தத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி துவங்கியுள்ள COP 25 உச்சி மாநாடு பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பூமியை காக்கும் பணியில் அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்ற ஆண்டு இந்த மாநாடு பாரிஸில் நடந்தது, புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு உலக நாடுகள் தங்கள் பங்கிற்ற்க்கு ஆற்றவேண்டிய செயல்களை இந்த மாநாடு வரையறுத்து தந்திருக்கிறது அனால் இதில் பங்கேற்கும் எந்த நாடும் முழுமையாக அதை கடைபிடிக்கிறதா என்பது கேள்விக்குறியே .


இந்த மாநாட்டில் இன்றைய தலைமுறையினரின் தவறுகளால் உருவாகவும் பருவநிலை மாற்றத்தின் சுமைகளை அடுத்த தலைமுறையினர் மீது சுமதி விட்டு செல்லாமல் அடுத்த தலைமுறையினரின் நலனுக்காக போராடியவர்கள் என்ற பெயரை நாம் அவர்களுக்கு விட்டு செல்லுவோம் என்று அணைத்து நாட்டு பிரதிநிதிகளும் உறுதி எடுத்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டின் தலைவராக சிலி நாட்டின் சுற்றுசூழல் துறை அமைச்சர் கரோலினா பொறுப்பேற்றிருக்கிறார்


தொழிற்புரட்சி காலத்தில் இருந்ததை விட இப்போது பூமியின் வெப்பம் ஒரு டிகிரி கூடுதலாக அதிகரித்துள்ளது. இந்த ஒரு டிகிரி என்பது குறைவு அல்ல, இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் இது போன்ற மாநாடுகளில் எத்தனை பெரிய திட்டத்தை முன்வைத்தாலும் அமெரிக்கா, சௌதி, ரஷ்யா, குவைத், சைனா போன்ற நாடுகள் தங்கள் பங்கிற்கான கடமையை செய்ய மாறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது


Next Story