Top
undefined
Begin typing your search above and press return to search.

தடையை மீறி ஆர்ப்பாட்டம்; கைது என்றதும் தெறித்து ஓடிய திமுகவினர்!

தடையை மீறி ஆர்ப்பாட்டம்; கைது என்றதும் தெறித்து ஓடிய திமுகவினர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 11:04 AM GMT


உச்சநீதி மன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது.


இதனால் கடலூர் மற்றும் சென்னையில் மட்டும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரில் மஞ்சகுப்பம் அஞ்சல் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் கழகம் போன்ற கட்சியினர் கலந்துகொண்டனர்.





ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றதும், திமுகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், திகவினர் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். முஸ்லீம் முனேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கைது செய்யபட்டனர்.


தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு வீராப்பாக வந்த திமுகவினரும், அவர்களின் தோழமை கட்சியினரும் கைது என்றதும், ஓட்டம் பிடித்தது கேலிக்கூத்தாக இருந்தது.


Next Story