Top
undefined
Begin typing your search above and press return to search.

இப்படியும் ஒரு வட்டாட்சியர்! பொது மக்கள் பாராட்டு!

இப்படியும் ஒரு வட்டாட்சியர்! பொது மக்கள் பாராட்டு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 10:51 AM GMT


கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் பகுதியை சேர்ந்த பா.சத்தியன் வட்டாட்சியராகவும், ஆன்மீக சிந்தனையாளராகவும் விளங்கி வருகிறார். இவர் கடந்த ஆண்டு திட்டக்குடி வட்டாட்சியராக பொறுப்பேற்ற உடன் சென்னை உயர்நீதிமன்றம், திட்டகுடி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள வைத்தியநாத கோயில் திருகுளத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.


நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், வருவாய்த்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது. ஆனால் சத்தியன், தனி நபராக நின்று அனைத்து எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும் மீறி குளத்தை சுற்றி இருந்த ஆகிரமிப்புகளை அப்புறப்படுத்தினார். கட்டபட்டங்கள் அனைத்தும் இடித்து அப்புறபடுத்தி 82 சென்ட் குளத்தை மீட்டு இந்துக்களின் பாராட்டுக்ளையும் பெற்றார்.





இவர், மேலும், ஒரு அதிரடியான நடவடிக்கையாக கொடிகலம் ஏரியை மீட்டு விவசாயக நிலம் பாசன வசதி பெறவைத்தார். திட்டக்குடி பகுதியில் உள்ள 110 குளம், குட்டிகளை மீட்டு, நீர்ஆதாரத்தை பெருக்கியதன் விளைவாக தற்போது பெய்துவரும் மழையால் நீர்நிறைந்து காட்சி அளிக்கிறது.


இதே போன்று தற்போது பணியாற்றும் புவனகிரி பகுதியில் அமைந்துள்ள 330 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார செய்த தொடர் நடவடிக்கையால், புவனகிரி பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. மேலும், நிலத்தடி நீரில் உள்ள உவர் மற்றும் உப்பு தன்மை குறைந்து வருகிறது.





பொதுவாக வட்டாட்சியர் என்றாலே, லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருப்பார்கள். மக்கள் நலனைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்ற குற்றச் சாட்டு உண்டு. ஆனால் வட்டாட்சியர் பா.சத்தியன் வட்டாட்சியர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதால், பக்தர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Next Story