Top
undefined
Begin typing your search above and press return to search.

அமித்ஷாவின் சிறப்பு ஆலோசகராக தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்!

அமித்ஷாவின் சிறப்பு ஆலோசகராக தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 11:56 AM GMT


தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்த சந்தன கடத்தல் மன்னர் வீரப்பனை சுட்டுக்கொன்றார்.


இதைப்போல ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பதவி வகித்தார். அப்போது சென்னையில் உள்ள ரவுடிகளை ஒழித்தலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதிலும் விஜயகுமாரின் பங்கு முக்கியமானது. இதன் மூலம் பலரது பாராட்டுக்களைப் பெற்றார் விஜயகுமார்.


பின்னர் மாவோயிஸ்டுகளை காளை எடுக்கும் பணியில் விஜயகுமார் ஈடுபடுத்தப்பட்டு, அதில் தனி முத்திரை பதித்தார்.


அதன் பிறகு காஷ்மீர் மாநில கவர்னரின் பாதுகாப்பு ஆலோசகராக மோடி அரசால் நியமிக்கப்பட்டு திறம்பட பணியாற்றினார். காஷ்மீர் மாநிலத்திற்கான தனி அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்காத அளவுக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதில் விஜயகுமாரின் பங்கு மிக முக்கியமானது.


இப்போது அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சிறப்பு பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களையும் கவனிப்பார். உள்துறை அமைச்சரின் சிறப்பு ஆலோசகர் பதவியில் விஜயகுமார் ஓராண்டு காலம் நீடிப்பார்.


Next Story