Top
undefined
Begin typing your search above and press return to search.

மலரும் நினைவுகள்! "ஆம் பாப்பாத்திதான், உங்களை சும்மா விடப்போவதில்லை" - சட்டசபையில் கர்ஜித்த ஜெயலலிதா!

மலரும் நினைவுகள்! ஆம் பாப்பாத்திதான், உங்களை சும்மா விடப்போவதில்லை - சட்டசபையில் கர்ஜித்த ஜெயலலிதா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 10:10 AM GMT


1989-ஆம் ஆண்டு திமுக ஆட்சி நடந்தது. அப்போது சட்டபேரவையில் நிதி நிலை அறிக்கை வாசிக்க எழுப்பினார் கருணாநிதி. 
கருணாநிதியை இடைமறித்து, மிக மிக துணிச்சலாக ஜெயலலிதா கேட்ட ஒரு கேள்வி சட்டசபையை குலுங்க செய்தது.



"நம் நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு, அந்நிய நாட்டு தீவிரவாதிகுழுவினை கொண்டாடிய தேசதுரோகியான உங்களுக்கு, இச்சபையில் பேசவோ, நிதிநிலை அறிக்கை வாசிக்கவோ என்ன அருகதை இருக்கின்றது?" என்று முழங்கினார் ஜெயலலிதா.



ஆடிபோய் விட்டது சட்டமன்றம். மறுகேள்வி கேட்க யாருக்கும் திராணியில்லை. ஆனால் தன் வழக்கமான திராவிட சேட்டையினை அங்கு அரங்கேற்றினார் கருணாநிதி. 
மைக்கை அணைத்துவிட்டு சொன்னார் "உன் யோக்கியதை தெரியாதா?"
"யார் யோக்கியதையைப் பற்றி பேசுவது?" என்று வீரமுடன் எழுந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவை கருத்துக்களால் எதிர்கொள்ள இயலாத திமுக எம்எல்ஏக்கள், சட்டமன்றத்திலும் தங்களின் ரவுடித்தனத்தை அரங்கேற்றினார்கள். ஒரு பெண் என்றும் பாராமல், ஜெயலலிதாவை சட்டமன்றத்திலே கொடூரமாக தாக்கினார்கள்.



"பிரமண நாயே..."  என்றெல்லாம் வசைமாரி பொழிந்த படி அடித்து உதைத்து அவமானப்படுத்தினார்கள்.
திமுகவின் துச்சாதனர்கள், ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து தங்களின் பரம்பரை குணத்தை காட்டினார்கள். சட்டசபை வரலாற்றில் அதுவரை கண்டிராத கீழ்த்தரமான செயல்கள் அரங்கேறின.
அப்போது உரக்க சொன்னார் ஜெயலலிதா, "ஆம், பாப்பாத்திதான், உங்களை சும்மா விடபோவதில்லை" என்று.



அந்த திடமான உறுதிதான், ஜெயலலிதாவை ஒரு இரும்பு பெண்மணியாக மாற்றியது. அதன் பின் அவரை அசைத்துபார்க்கும்  சக்தி யாருக்குமில்லை. 
3 முறை, அதே சபையின் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து அலங்கரித்தார். அதோடு எதிரிகளை அலறவும் வைத்தார்.
எந்த சபையில் அவமானப்படுத்தப்பட்டாரோ, அதே சபையில் அதைவிட உறுதியாக, கம்பீரமாக அமர்ந்திருந்தார். சிங்கமென கர்ஜித்தார் ஜெயலலிதா. அவரை அவமானப்படுத்தியவர்களெல்லாம் கூனிக்குறுகி அதே சபையில் காலம் கடத்தினர்.



அவரைபோல் இனியொரு பெண்ணை, அந்த சபை அலங்கரிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
சிங்கப்பெண் என்றால் அது ஜெயலலிதாதான். இரும்புப் பெண் என்றாலும் அவர்தான்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு பெண் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல திராணியில்லாமல், அவரை ஒரு பெண் என்றும் பாராமல் அடித்து அவமானப்படுத்திய திமுகவினர்தான், பெண் உரிமையினை குத்தகைக்கு எடுத்ததுபோல் பேசுகின்றனர்.


Next Story