Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாடிக்கு செல்ல நகரும் தானியங்கி நாற்காலி வசதி! ரயில்வே துறை அசத்தல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாடிக்கு செல்ல நகரும் தானியங்கி நாற்காலி வசதி! ரயில்வே துறை அசத்தல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 12:36 PM GMT



சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினமும் 30000-க்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.


சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.


முதியோர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோரின் வசதிக்காக மாடிப்படி செல்வதற்கு நவீன தானியங்கி நகரும் நாற்காலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் படிக்கட்டுகளில் ஏறி இறங்க சிரமப்படுகின்ற ஊனமுற்றவர்களும், வயதானவர்களும் மாடிக்கு செல்வதற்கும், மாடியிலிருந்து கீழ் தளத்திற்கு இறங்குவதற்கும் எளிதாக செல்ல முடியும்.



இது தொடர்பான வீடியோ ஒன்றை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், “சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தானியங்கி நகரும் நாற்காலி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உடல் ஊனமுற்ற பயணிகள் எளிதாக மாடிக்கு செல்ல இயலும்” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/PiyushGoyalOffc/status/1202471305276252160

Next Story