Top
undefined
Begin typing your search above and press return to search.

“மூளை சாவு” அடைந்து விட்டதா நோட்டோ அமைப்பு.? ஆட்டம் காணும் ஐரோப்பிய நாடுகள்!

“மூளை சாவு” அடைந்து விட்டதா நோட்டோ அமைப்பு.? ஆட்டம் காணும் ஐரோப்பிய நாடுகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 1:50 AM GMT


அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளின் கூட்டு படையான நேட்டோ சிரியா போரில் தொடங்கி பல குழப்பங்களை சந்தித்து வருகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா நாடுகளின் கூட்டு படையில் அங்கம் வகிக்கும் நாடுகள் சிரிய
போரில் யாரை ஆதரிப்பது என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறதும், சமீபத்தில் பிரெஞ்சு பிரதமர் நேட்டோ அமைப்பு “மூளை சாவு” அடைந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எண்ட்ரஜன் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.


வடக்கு அட்லாண்டிக் கூட்டு படை என்ற
பெயரில் விளங்கும் நேட்டோ துருக்கி உட்பட ஐரோப்பிய நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கிறது, சர்வதேச பிரச்சனைகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த நேட்டோ சிரிய போர் காலத்தில் அமெரிக்காவின் தீவிர ஒத்துழைப்பு இன்மையாலும், அங்கு போரிடும் பிரிவுகளில் எந்த பிரிவை ஆதரிப்பது என்ற கருத்து வேறுபாட்டிலும் பிரச்சனை கிளம்பியது. தற்போது
துருக்கி நாடு புதிதாக ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளது அது சிரியாவிலும் துருக்கியில் பரவி இருக்கும் குர்து இன குழுக்களை தீவிரவாதிகளாக கருத வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது,


சிரியாவில்
நேட்டோ படைகள் குர்து குழுக்களை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது. அனால்
துருக்கி குர்துக்களை தீவிரவாதிகளாக கருதுகிறது. சமீபத்தில்
நடந்த நாடாவின் 70 ஆவது வருடாந்தர கூட்டத்தில் பேசிய இண்ட்ரொஜென் இதை வலியுறுத்தினார். மேலும்
ரஸ்சியாவிடம் இருந்து தளவாடங்களை வாங்கும் கொள்கையால் நேட்டோ நாடுகளுடன் துருக்கி உரசல் போக்கை கடைபிடித்து வருகிறது, தற்போது நேட்டோவின் இந்த நிலை அரசியல் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பால்டிக்
நாடுகள் என்று சொல்லப்படும் ரஸ்சிய நாட்டின் மேற்கு எல்லையை ஒட்டிய நாடுகளில்- ரஷ்ய அரசியல் மற்றும் ராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாமல் இருப்பதற்கு நேட்டோ படைகள் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story