Kathir News
Begin typing your search above and press return to search.

பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் - தனி நபர் பாதுகாப்பு வரை நுணுக்கமாக கட்டமைக்கப்படும் இந்தியா!

பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் - தனி நபர் பாதுகாப்பு வரை நுணுக்கமாக கட்டமைக்கப்படும் இந்தியா!

பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் - தனி நபர் பாதுகாப்பு வரை நுணுக்கமாக கட்டமைக்கப்படும் இந்தியா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 2:47 AM GMT


மாநில சட்ட பேரவையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட 10 விழுக்காடு இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை 1960 முதல் ஒவ்வொரு பத்து ஆண்டும் மாநில அரசு நீடித்து வந்தது, அந்த வகையில் தாழ்த்தப்பட்டடோர் மற்றும் பழங்குடியனருக்கான இட ஒதுக்கீட்டை நீடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் ஜனவரி 25 ஆம் தேதியோடு முடிவடைகிறது இதை தொடர்ந்து மக்களவை மாநில சட்டப்பேரவையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 2030 ஜனவரி வரை நீடிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இது தொடர்பான சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதற்க்கு அடுத்ததாக தனிநபர்கள் தகவல்களை பெறுதல், சேமித்தல் கையாளுதல் உள்ளிட்டவற்றிற்கான விதிமுறைகள் அடங்கிய தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு 15 கோடி வரையிலோ அல்லது அந்த நிறுவனத்தின் மொத வருவாயில் நான்கு சதவிகிதமோ அபராதமாக விதிக்க சட்ட திருத்தும் வலியுறுத்துகிறது.


இதற்கு அடுத்து மிக முக்கியமானதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சரவை திரும்ப பெற்றுக்கொண்டது,
ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வேற வேண்டிய அவசியம் இல்லாமல் திரும்பப்பெற்றுக்கொள்ளப்பது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News