Top
undefined
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானுக்கு புத்தி வந்துருச்சா.? வரலாற்றில் முதல் முறையாக நடந்த சம்பவம் - கோர்ட்டுக்கு போன உசுரு வந்திருச்சு!

பாகிஸ்தானுக்கு புத்தி வந்துருச்சா.? வரலாற்றில் முதல் முறையாக நடந்த சம்பவம் - கோர்ட்டுக்கு போன உசுரு வந்திருச்சு!

MuruganandhamBy : Muruganandham

  |  6 Dec 2019 2:41 AM GMT


பாகிஸ்தானின் ராணுவ தளபதி காமர் பாஜ்ஜவா வின் பதவி காலத்தை மூன்று ஆண்டுகள் நீடித்ததற்க்கு இம்ரான் அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது, ஏனென்றால் மற்ற நாடுகளில் நாட்டிற்காக ராணுவம் என்றால் பாகிஸ்தானில் ராணுவத்திற்க்காகத்தான் நாடே இருக்கிறது, பாகிஸ்தானை பொறுத்தவரை அங்கு அதிகாரம் யார் கையில் இருக்கிறது ? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடமா ? ராணுவத்திடமா ? அல்லது வலிமை வாய்ந்த உளவு அமைப்பான isi இடமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை பாகிஸ்தானில் நீதித்துறையும் ஜனநாயகமும் ஒரு பெயருக்காக இருந்தாலும் நாட்டை ஆள்வது ராணுவமே. இது போன்று ராணுவ தளபதிகளின் பதவிக்காலங்களை நீடிப்பது பாகிஸ்தானில் ஒன்றும் புத்திதல்ல. இதற்க்கு முன் ஜெனரல் ஜியா உல் ஹூக், ஜெனரல் பர்வேஸ் முஷாராஃ போன்றவர்கள் பதவி காலம் நீடிக்கப்பட்டவர்கள்தான். அரசியல் தலைவர்கள்ஆசிப் அலி சர்தாரி, நவாஸ் ஷெரீப் போன்றவர்களும் இந்து போன்ற ராணுவ தளபதிகளின் பதவியை நீடிப்பதற்கு பெரிதாக தயங்கியது இல்லை.


இது போன்ற நடவடிக்கைகள் பொதுவாக பிரதமரின் ஆதாயத்திற்காகவே நடக்கும். பாக்கிஸ்தான் ராணுவம் அரசியல் தலைவர்களுக்கு ஏற்ப எப்போதுமே இரண்டு பிரிவாக இயங்கும். அதில் பிரதமரின் ஆதரவு பெற்ற குழுவின் சீனியர் அதிகாரியே ராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டு தேவையென்றால் பதவி நீட்டிப்பு செய்யப்படுவர். 2000 ஆம் ஆண்டு நவாஸ் ஷரீப் காலத்தில் முஷ்ரபிற்கு இப்படித்தான் பதவி யுயர்வு அளிக்கப்பட்டு, பின்னர் எதிராக திரும்பிய பின்னர் நீக்கப்பட்டார்.


தற்போதய ராணுவ தளபதியின் பதவி நீடிக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராதவிதம்மாக இதை தடை செய்ய கோரி சாதாரண ஒரு வழக்கறிஞரால் ஒரு வழக்கு தொடரப்பட்டது, இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பின்னர் அந்த வழக்கறிஞர் வழக்கை வாபஸ் வாங்க முன்வந்த போது நீதிமன்ற மறுத்து நீதிபதி கோஷா அதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதுதான். பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதன் முறையாக நீதித்துறைக்கு கொஞ்சமேனும் உயிர் இருக்கிறது என்று இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது.


இதோடு நில்லாமல் இம்ரான் கான் அரசிற்கு நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார், தற்போதைய தளபதியின் பதவியை 6 மாதம் மட்டும் நீடித்து அந்த ஆறு மாதத்திற்குள் பதவி நீடிப்பு குறித்து அரசியல் சட்டத்தில் தெளிவிற்கான சட்ட திருத்தம் செய்யும் படி அரசை பணித்துள்ளார். இது பாக்கிஸ்தான் மட்டுமின்றி இந்தியாவிலும் உலக அரசியல் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.



Next Story