Kathir News
Begin typing your search above and press return to search.

உயிரை பணையம் வைத்து, பயணியை காப்பாற்றிய ரயில்வே காவலர் - வைரலானது வீடியோ! ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு!

உயிரை பணையம் வைத்து, பயணியை காப்பாற்றிய ரயில்வே காவலர் - வைரலானது வீடியோ! ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு!

உயிரை பணையம் வைத்து, பயணியை காப்பாற்றிய ரயில்வே காவலர் - வைரலானது வீடியோ! ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 6:01 AM GMT



தன் உயிரை பணயம் வைத்து ரயில் பயணி ஒருவரை, ரயில்வே காவலர் காப்பாற்றியுள்ளார். அவரை, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.


மும்பை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அனில்குமார். இவர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த போது, பயணி ஒருவர் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அதனைக் கவனித்த அனில்குமார், பாய்ந்து சென்று அந்த பயணியை தண்டவாளத்தில் இருந்து தூக்கி நடைமேடையில் தள்ளி விட்டுவிட்டு, அவர் எதிர்த்திசையில் மிக வேகமாக கடந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டார்.


இந்த வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் கடந்த 3-ஆம்தேதி இரவு 10.29 மணிக்கு நடந்துள்ளது. இது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.


தன் உயிரை பணையம் வைத்து பயணியை காப்பாற்றிய ரயில்வே போலீசார் அனில் குமாருக்கு, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோவை இணைத்து அனில் குமாரை பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ரயில்வே போலீஸ்காரர் அனில்குமார், விவேகத்துடனும், வீரத்துடனும் செயல்பட்டு பாய்ந்து சென்று தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணியை காப்பாற்றியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள். அதேநேரம் பயணிகள் நடை பாலங்களை பயன்படுத்தி இதுபோன்ற ஆபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று மிகக் கடுமையாக அறிவுறுத்துகிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் தண்டவாளத்தை கடக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/PiyushGoyal/status/1202563583156129792


இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News