Top
undefined
Begin typing your search above and press return to search.

களைகட்டும் திருவண்ணாமலை தீபத் திருவிழா - 2,615 சிறப்புப் பேருந்துகள், பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்!

களைகட்டும் திருவண்ணாமலை தீபத் திருவிழா - 2,615 சிறப்புப் பேருந்துகள், பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 2:18 AM GMT


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் கார்த்திகை மகா தீபத்திருவிழா முக்கியமானது. இந்த ஆண்டு மகா தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வரும் 10-ம் தேதி ஏற்றப்படுகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்


இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை மகாதீப விழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது,பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது,போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


Next Story