Top
undefined
Begin typing your search above and press return to search.

நாசகரமான எலக்ட்ரானிக் குப்பைகள் குவிப்பில் இந்தியா நான்காவது இடம்! இந்தியாவில் தமிழகம் 2-ம் இடம்!

நாசகரமான எலக்ட்ரானிக் குப்பைகள் குவிப்பில் இந்தியா நான்காவது இடம்! இந்தியாவில் தமிழகம் 2-ம் இடம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 9:21 AM GMT


உலக அளவில் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி, ஏசி, மின்னணு உதிரி பாகங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்பது நமக்கு ஒரு புறம் மகிழ்ச்சிதான். என்றாலும் பயன்படுத்தப்பின் ஒதுக்கப்படும் பயனில்லாத இந்த எலக்ட்ரானிக் குப்பைகள் வீட்டுக்கு வீடு மற்றும் அலுவலகங்களில் பெருமளவில் குவிந்து வருகின்றன.


இவற்றை பிளாஸ்டிக்குகள் போல மறு சுழற்சி செய்ய முடியாது என்பதால் பழைய பொருள்கள் வேன்குபவர்கள் யாரும் வாங்க முன் வருவது கிடையாது. இத்தகைய நிலையில் இவை பொது குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு மக்கவும் முடியாமல், மறுபடியும் பயன்படாமல் உள்ளன. இதிலுள்ள லெட், கேட்மியம், மெர்குரி போன்ற இரசாயனங்கள் 60 முதல் 100 சதவீதம் வரை இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், தீங்கு உண்டாக்குவதுடன் மண்ணை அதிக அளவில் விஷமாக்கி சுற்றுச்சூழலுக்கு மாபெரும் ஆபத்தாய் மாறிவருகின்றன. வரும் காலங்களில் புவி வெப்பமயமாவதையும், கடலில் நீர்மட்டம் உயர்வதையும் தடுக்க இதனால் முடியாது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்..


மேலும் அவர்கள் கூறுகையில் இ-வேஸ்ட்களை எரித்தாலும், மண்ணில் புதைத்தாலும் 95 சதவீத மாசு ஏற்படும் என்றும், இதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்கின்றனர். தமிழகத்தில் இதுபோன்ற இ-வேஸ்ட்களை சேகரித்து மறு சுழற்சி செய்யவும், அவற்றை பாதுகாப்பாக அழிப்பதற்கும் இரண்டே நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இது போதாது என்றும், இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story