Top
undefined
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி அ.தி.மு.க கூட்டணி கட்சிகளிடையே ஆலோசனை!

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி அ.தி.மு.க கூட்டணி கட்சிகளிடையே ஆலோசனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 5:43 AM GMT


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது அ.தி.மு.க சார்பாக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கேபி முனுசாமி கலந்து கொண்டனர், பா.ஜ.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் ராகவன்,  பாமக சார்பில் மாநில தலைவர் ஜி.கே .மணி தேமுதிக சார்பில் துணைச் செயலாளர் பார்த்தசாரதி, தமாகா சார்பில் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் கலந்து கொண்டனர்.



கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு முடிந்த பிறகு அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது, உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு அணுக வேண்டும் என அ.தி.முக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


Next Story