Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் வலுவுடன், தயக்கமின்றி வங்கிகள் செயல்படுகின்றன! பிரதமர் மோடி பேச்சு!

அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் வலுவுடன், தயக்கமின்றி வங்கிகள் செயல்படுகின்றன! பிரதமர் மோடி பேச்சு!

அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் வலுவுடன், தயக்கமின்றி வங்கிகள் செயல்படுகின்றன! பிரதமர் மோடி பேச்சு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 7:35 AM GMT


டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் சார்பாக தலைமைப் பண்பு வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.


அப்போது அவர் பேசுகையில் “ முந்தைய ஆட்சிக் காலத்தில் வங்கி செயல்பாடுகளுக்குள் அரசியல்வாதிகள் தலையிட்டு வேண்டப்பட்டவர்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்ததாலும், ஊழல்கள் மலிந்ததாலும் வங்கிகள் வாராக் கடன்களுக்கு உள்ளாகியது.


கடந்த கால அரசுகளின் இத்தகைய தவறான செயல்களால்தான் வங்கிகளுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. தற்போது அது போன்ற நெருக்கடிகள் வங்கிகளுக்கு இல்லை. வங்கிகளை சரியான நிலைக்கு மீட்க அவற்றின் மறு சீரமைப்புக்காக மத்திய அரசு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது. மேலும் தீர்ப்பாயங்கள் மூலமாக சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாஜக அரசு வங்கிகளுக்கு மிகவும் உதவியுள்ளது.


இதனால் தற்போது வங்கிகள் நெருக்கடிகள் தீர்ந்து சுதந்திரமாக வலிமையுடன், வளர்ச்சியுடன் செயல்படுகின்றன. இந்த நிலையில் வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பயம் இன்றி ஊழியர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.


தமது அரசு, மிகச்சிறந்த வளமான எதிர்காலத்தை நோக்கி செல்வதாகவும், தொழில்புரியும் தகுதி படைத்த நாடுகளின் தரவரிசையில் இந்தியா 70 இடங்களுக்கு முன்னேறி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். காஷ்மீர் விவகாரம், அயோத்தி வழக்கு ஆகியவற்றை சுட்டிக் காட்டிய மோடி நாடு இப்போது அனைவருக்கும் பொதுவான வளர்ச்சியை இலக்கு வைத்து அதை நோக்கி பயணிப்பதாகக் கூறினார்.


Translated Article From HINDUSTANTIMES


Next Story
கதிர் தொகுப்பு
Trending News