Kathir News
Begin typing your search above and press return to search.

என்கவுண்டர் எப்படி நடந்தது..? சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்னார் விளக்கம்.!

என்கவுண்டர் எப்படி நடந்தது..? சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்னார் விளக்கம்.!

என்கவுண்டர் எப்படி நடந்தது..? சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்னார் விளக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 2:29 AM GMT


ஐதராபாத் பெண் கால்நடை டாக்டர் பிரியங்கா ரெட்டி பலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட போது என்ன நடந்தது என்பது குறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்னார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார் அப்போது அவர் பேசியதாவது


நவம்பர் 27ம் தேதி இரவு பெண் மருத்துவர் நான்கு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்,அறிவியல் முறைப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பெண் மருத்துவர் பலாத்கார வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்தோம்,வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் வைத்து ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருந்தோம்,முகமது ஆரிப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேசவலுவிடம் விசாரணை நடத்தி வந்தோம்,கைது செய்யப்பட்ட 4 பேரும் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தோம்,டிசம்பர் 4 மற்றும் 5ந் தேதிகளில் நான்கு பேரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது பெண் டாக்டரின் செல்போன் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்துள்ளதாக கூறினர்.


4வது நாள் சொர்ணப்பள்ளி சிறையில் இருந்து பலாத்காரம் நடந்த இடத்துக்கு 4 பேரையும் அழைத்துச் சென்றோம்,4 பேரையும் அழைத்துச் சென்ற போது, 10த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக சென்று இருந்தனர்,செல்போனை தேடும் போது அது இங்கு இருக்கிறது, அங்கு இருக்கிறது என போக்கு காட்டினர்,4 பேரும் ஒன்றாக சேர்ந்து காவலர்களை தாக்கினர். கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் கைது செய்யப்பட்டவர்களில் சென்னகேசவலு, முகமது ஆரிப் ஆகிய இரண்டு பேர் போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து தாக்க முயன்றனர்,போலீஸ் மீது இரண்டு பேரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நாங்கள் பதில் தாக்குதல் நடத்த வேண்டியதாகிவிட்டது.


தற்காப்புக்காக போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேரும் உயிரிழந்தனர். கைதிகள் தாக்கியதில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர்,குற்றவாளிகள் 4 பேரும் தெலுங்கானா - ஆந்திரா எல்லையில் மேலும் பல குற்றங்களில் ஈடுப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது,காலை 5.45 மணியில் இருந்து 6.15க்குள் என்கவுன்டர் நடைபெற்றது,கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் டிஎன்ஏ பரிசோதனையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது,இவர்கள் இன்னும் பல பேரை பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மற்ற விசாரணைகள் நடைபெற்று வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News