Top
undefined
Begin typing your search above and press return to search.

சிதம்பரம் அருகே கடலில், மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு!

சிதம்பரம் அருகே கடலில், மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 11:05 AM GMT


சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை பகுதியில் சி.புதுக்குப்பம் பகுதியில், சக்திவாய்ந்த ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்ட ஒரு பகுதி ஏசி யூனிட் உடன் கூடிய கண்டெய்னர் பாகம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து இப்பகுதி மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் மற்றும் உளவுத்துறை போலீசார் விரைவாக சென்று கரையில் ஒதுங்கிய கன்டெய்னரின் பாகத்தை சோதனை செய்தனர்.


அதில் அதிக சக்தி வாய்ந்த ஜிபிஆர்எஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அடங்கிய பகுதி பொருத்தப்பட்டிருந்தது. மேலும் ஏசி பகுதியிலுள்ள சிலிண்டர் மற்றும் 20 சென்டிகிரேட் வரை குளிர்விக்கும் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 70 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதன் மற்றொரு பகுதி கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையில் கிடைத்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.





மேலும் இது குறித்து கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சங்கீதா கூறியதாவது:-


இது சிங்கப்பூர் OCL கப்பலில் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல், கடந்த 3- -11 -2019 அன்றுஇலங்கையிலிருந்து கொல்கத்தா நோக்கி சென்றபோது ஏற்பட்ட புயலின் காரணமாக 25-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளன. சப்மரையன் கம்பெனிக்கு சொந்தமான கன்டெய்னர் நிறுவனம், ஆஸ்திரேலீயாவை தலைமையிடமாக கோண்டு செயல்பட்டு வருகிறது.





மேலும் கடந்த வாரத்தில் நெல்லூர் ஆந்திர மாநிலத்தில் இரண்டு கண்டெய்னர் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னையிலிருந்து உளவுத்துறை, மற்றும் புலனாய்வு துறையினர் வருகின்றனர். மிக கவனமாக ஆராய்ச்சி செய்து பின்னர் காவல்துறை அதிகாரி உதவியுடன் இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்படும்.


சென்னை,நெல்லுர் ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட கன்டெய்னர்களுக்கும், இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.


இவ்வாறு கடலோர காவல்படை கடலூர் மாவட்ட இன்ஸ்பெக்டர் சங்கீதா தெரிவித்தார்.


இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story