Top
undefined
Begin typing your search above and press return to search.

கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரி, சிக்சருமாக விளாசிய ஜோடி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்!

கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரி, சிக்சருமாக விளாசிய ஜோடி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 2:21 AM GMT


இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்,வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது,இதையடுத்து, 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.


ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ராகுலுடன் சேர்ந்து கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக விளாசினர். முதலில் அரை சதம் கடந்த கேஎல் ராகுல் 62 ரன்னில் வெளியேறினார். இவர் கோலியுடன் இணைந்து 100 ரன்கள் சேர்த்தார்,அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 4 ரன்னிலும் அவுட்டாகினர்,மறுமுனையில் தூணாக நின்ற விராட் கோலி தனது அதிரடியான ஆட்டத்தால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்,இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது.டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்து கேஎல் ராகுல் சாதனை படைத்தார், ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது,3 போட்டிகள் கொண்ட தொடரில் 1- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை.


Next Story