Top
undefined
Begin typing your search above and press return to search.

நீதிமன்ற தீர்ப்பைவிட அல்லாவின் தீர்ப்புதான் முக்கியம்: மீண்டும் பதற்றத்தை தூண்டி வரும் இஸ்லாமிய மாணவர் அமைப்புகள்!!

நீதிமன்ற தீர்ப்பைவிட அல்லாவின் தீர்ப்புதான் முக்கியம்: மீண்டும் பதற்றத்தை தூண்டி வரும் இஸ்லாமிய மாணவர் அமைப்புகள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 2:25 AM GMT


டெல்லியில் உள்ள
ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் ஹிந்து –
முஸ்லிம்களுக்கிடையே பதற்றத்தை தூண்டும் வகையில் பல போஸ்டர்களை வெளியிட்டு
வருகின்றனர்.


அவர்கள் வெளியிடும்
அனைத்து படங்களிலும் அல்லாவின் தீர்ப்பு மட்டுமே வலிமையானது. மற்ற சட்டங்கள்
அனைத்தும் அல்லா சட்டத்துக்கு அடங்கிய சட்டங்கள்தான் என்ற வாசகங்கள் உள்ளது.


அதில் ஒரு படம் அயோத்தி
குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு கேலி கூத்து என வர்ணிக்கிறது. அதே படம்
ராமராஜ்யம் என்பது இஸ்லாமியர்கள் மீதான ஒரு அடக்குமுறை என வர்ணிக்கிறது.


'ஜாமியா மாணவர்கள்' எழுதிய இன்னொரு சமூக
ஊடக போஸ்டர் ஒன்றில் , பாபர் மஸ்ஜித் ஆக்கிரமிப்பு ' ஜெருசலேமில் உள்ள மஸ்ஜித் அல் அக்சாவின் 'ஆக்கிரமிப்பு'க்கு சமம் என்று அறிவிக்கிறது. மேலும் "தவ்ஹீத்தின்
கொடி மற்றும் அல்லாஹ்வின் கலிமா இவை மட்டுமே எங்கும் ஆட்சி செலுத்த வேண்டும்
என்றும் இல்லை என்றால் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது” எனவும் கூறுகிறது.


மேலும் ஜாமியாவின்
மாணவர் அமைப்பு நேற்று வெள்ளிக் கிழமை மாலை 4.40 மணியளவில் பல்கலைகழக வளாகத்தில்
உள்ள பாலிடெக்னிக் அருகே உள்ள புல்வெளியில் மாணவர்களை கூட்டத்துக்கு அழைத்தது.
கூட்டத்துக்கு வராத மாணவர்களை கண்டித்தது. இந்த அழைப்புகளை தங்கள் முக நூல் மூலமாக
வெளியிட்டு தீவிரவாத மாணவர்களை ஓன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.


இதில் ராமஜென்ம பூமிக்கு
எதிரான கருத்துக்கள் மற்றும் இதன் மீதான தீர்ப்பை பற்றி மட்டும் அவர்கள் ஆவேசமாக
பேசியும், கருத்துக்களை பரப்பியதும் தெரிய வந்துள்ளது. மேலும் “அல்லாஹ்வின் கட்டளை
ஒவ்வொரு சட்டத்திற்கும் மேலானது” என்கிற கருத்துக்களை பரப்பியது.


மேலும் அல்லாஹ்வின் சட்டம்’
தவிர வேறு எந்த சட்டத்திற்கும் கீழ்ப்படியத் தேவை இல்லை என்று பகிரங்கமாக
அறிவிக்கும் இடுகைகளையும் இந்த அமைப்பு சென்ற அக்டோபர் 29 அன்று பகிரப்பட்ட போஸ்டரில்
பகிர்ந்துள்ளது. அந்த இடுகைகளில் அவர்கள், “உலகம் முழுவதும் பல
அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. நிறம், இனம் மற்றும்
எல்லாவற்றிற்கும் மேலாக தேசியத்தின் அடிப்படையில் மற்றவர்களிடம் அன்பும் பகைமையும்
கொண்டவர்கள். ஆனால் நம் கொள்கையான ”அல்லாஹ் ஒருவர் மீதான நம்பிக்கை மட்டுமே தேசியம்
அல்லது பிறப்பு இவற்றை விட சிறந்த கூட்டுறவு என்று அது மேலும் கூறுகிறது.


மேலும் அல்லாஹ்வின் அனைத்து விசுவாசிகளும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் பாலஸ்தீனியர்களிடம் அனுதாபம் கொள்ள வேண்டும், எனவே “இஸ்ரேலின் சியோனிச அரசை” எதிரியாகக் கருத வேண்டும். இவ்வாறு அவர்கள் படிக்கும் வயதில் படிக்காமல், முன்னேற்றம் குறித்து சிந்திக்காமல் மற்ற இனமக்களுக்கு எதிரான பிரிவினை வாத உணர்வுகளை தூண்டி வருவது குறித்து பலர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகார்களும் சென்றுள்ளன என கூறப்படுகிறது.  




https://www.opindia.com/2019/12/jamia-millia-islamia-student-organisation-babri-masjid-israel-palestine-sharia-law-allah-supreme-court-ayodhya/




Next Story