Top
undefined
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சி தேர்தல் ஜனவரி மாதம் ஒத்திவைப்பு - புதிய தேர்தல் அட்டவணை திங்கட்கிழமை வெளியாக வாய்ப்பு!

உள்ளாட்சி தேர்தல் ஜனவரி மாதம் ஒத்திவைப்பு - புதிய தேர்தல் அட்டவணை திங்கட்கிழமை வெளியாக வாய்ப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 9:33 AM GMT


தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.


அதில் 6-ந்தேதி (நேற்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ந்தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவது தான் எளிய வழி என்றும் கருத்து தெரிவித்தனர்.
எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய தேர்தல் தேதி வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என தெரிகிறது.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு பணிகள் முடிந்த பிறகுதான் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உடனே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
இதற்காக பழைய தேர்தல் அட்டவணையை ரத்து செய்வதாகவும், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளதாகவும் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இதனால் நேற்று நடைபெற இருந்த வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளும் திரும்ப பெறப்பட்டனர்.
நேற்று காலையில் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளாட்சி உயர் அமைப்பு அதிகாரிகளை அழைத்து தீவிர ஆலாசனை நடத்தினார்கள்.
இந்த கூட்டத்தில், 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உடனே தேர்தல் நடத்தலாமா? அல்லது 9 மாவட்டங்களிலும் வார்டு வரையறை பணிகளை முடித்த பிறகு ஒட்டு மொத்தமாக சேர்த்து தேர்தல் நடத்தலாமா? என்று ஆலோசித்தனர். இதில் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.


இதனால் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், சட்ட வல்லுனர்களுடன் தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவது தான் எளிய வழி என்றும் கருத்து தெரிவித்தனர்.
எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய தேர்தல் தேதி வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என தெரிகிறது.


Source :- MAALAIMALAR


Next Story