Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒருவர் தனி வெப்சைட் தோற்றுவிப்பதன் மூலம் தனி தேசத்தை தோற்றுவிக்க முடியாது! நித்தியானந்தாவின் ‘கைலாஷ் அரசு’ குறித்து வெளியுறவு அமைச்சரக அதிகாரி பேட்டி!

ஒருவர் தனி வெப்சைட் தோற்றுவிப்பதன் மூலம் தனி தேசத்தை தோற்றுவிக்க முடியாது! நித்தியானந்தாவின் ‘கைலாஷ் அரசு’ குறித்து வெளியுறவு அமைச்சரக அதிகாரி பேட்டி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 5:34 AM GMT


பாலியல் புகார்கள், குழந்தைகள் கடத்தல் புகார்கள், இளம்பெண்கள் தொடர்பான புகார்கள் என அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தா சாமியார் மீது குஜராத் மாநிலத்திலும் புகார் அளிக்கப்பட்டது. பல்வேறு புகார்கள் குவிந்ததை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்தை காலி செய்தனர். பல்வேறு மாநில போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


இந்த நிலையில் எங்கோ வெளி நாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கருதப்படும் நித்யானந்தா சமீபத்தில் தான் ஈக்வடார் நாட்டின் ஒரு தீவில் இந்தியாவில் கைவிடப்பட்ட இந்துக்களுக்கான தனி தேசம் ஒன்றை அமைத்துக் கொண்டிருப்பதாகவும், இதற்கான பாஸ்போர்ட், தனிதேசத்துக்கான இலட்சினை, தேசக் கொடி, சிம்மாசனம், அரசியலமைப்பு சட்டம், பிரதமர் பதவி, துறைவாரியான நிர்வாக அமைப்பு அனைத்தும் தயாராகிவிட்டதாக கைலாஷ் என்ற பெயரில் தனி இணையதளம் ஒன்றை தோற்றுவித்து அதில் படங்களுடன் அனைத்து தகவல்களையும் தெரிவித்தார். அதில் உள்ள படம் ஒன்றில் ஒரு தீவின் கடற்கரை ஓரம் நித்யானந்தா சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருப்பது போலவும், அவர் அருகே ஒரு சீடர் பழங்கால பாரம்பரிய சேவகன் உடையில் குடையை பிடித்துக் கொண்டு இருப்பது போலவும் படங்கள் வெளியாயிற்று.





இதை பற்றி அனைத்து தமிழ் மற்றும் இந்திய ஆங்கில நாளேடுகளிலும் செய்திகள் வெளியாகின. அதில் நித்யானந்தா உண்மையிலேயே ஒரு தீவுக்கு இந்து ராஜா ஆகிவிட்டதைப் போல கற்பனையை கலந்து எழுதின.


இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் “ ஒருவர் ஒரு தனி இணைய தளத்தை தோற்றுவிப்பதன் மூலம் தனி தேசத்தை தோற்றுவிக்க முடியாது என்று கூறிய அவர் இது வரை எந்த அமைப்பும் நித்யானந்தா எங்கு உள்ளார் என கேட்டு எங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. என்றார்.


மேலும் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ஏற்கனவே காலாவதியாகி விட்டதால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் பல்வேறு புகார்கள் அவர் மீது வந்துள்ள நிலையில் அவருடைய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


ஒரு வேளை வேறு நாட்டில் அவர் ஒளிந்திருந்தால் அவர் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு அவரை அந்த நாட்டு அமைப்புகள் இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வருமானால் நாங்கள் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பு கொடுப்போம். ஆனால் இது வரை எந்த அமைப்பும் எங்களிடம் அது போன்ற கோரிக்கையை முன் வைக்கவில்லை என்றார்.


இந்த நிலையில் நித்யானந்தாவின் ஆதரவு வழக்கறிஞர்கள் குழு ஈக்வடார் தீவுகளில் ஒரு தீவை கைலாசபுரி நாடாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நா சபையிடம் மனு அளிப்பதற்கான கடினமான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.


அதே சமயம் நித்யானந்தாவுக்கு நாங்கள் எங்கள் நாட்டில் எந்தவித அடைக்கலத்தையும் அளிக்கவில்லை என்றும் அவருக்கு தென் அமெரிக்க கடலோரத்தில் தீவு வாங்க உதவவில்லை என்றும், ஹைதி செல்லும் வழியில் அவர் இங்கு வந்து சென்றதாகவும் மட்டுமே ஈக்வடார் அரசு கூறியுள்ளது. 


Translated Article From OPINDIA


Next Story