Top
undefined
Begin typing your search above and press return to search.

கொடி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடியை அணிவித்த சிறுமி!

கொடி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடியை அணிவித்த சிறுமி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 12:47 PM GMT


ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது, கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், அண்டை நாட்டு எதிரிகள் மற்றும் உள்நாட்டு தீவிரவாதிகளின் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது. 



இந்நிலையில், டெல்லியில் இன்று கொடிநாள் தினத்தை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார்,ராணுவ வீரர் குடும்பத்தை சேர்ந்த சிறுமி பிரதமரின்  கொடியை அணிவித்தார். கொடிநாள் உண்டியலில் பிரதமர் அந்த சிறுமியின் கைகளால் பணம் செலுத்தினார் மற்றும் பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள குறிப்பில் ‘நமது படைகள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தாரின் ஒப்பில்லாத வீரத்துக்கு கொடிநாள் தினத்தன்று நாம் தலைவணங்குகிறோம். நமது படைவீரர்களுக்கு உங்களது பங்களிப்பை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.


Next Story