Top
undefined
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையை பின்னுக்குத் தள்ளியது சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை! தினமும் 15,000 பேர் பார்த்து செல்கின்றனர்!

அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையை பின்னுக்குத் தள்ளியது சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை! தினமும் 15,000 பேர் பார்த்து செல்கின்றனர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 6:16 AM GMT


அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை 133 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த சிலையை சராசரியாக தினமும் 10,000 பேர் பார்த்து செல்கின்றனர்.


அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை பார்க்க வரும் பார்வையாளர்களைவிட, குஜராத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பார்க்க வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை அருகே அமைக்கப்பட்டுள்ளது. இது 182 மீட்டர் உயரம் கொண்டது. ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும், பட்டேல் சிலையை தினமும் 15,000 சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இது கடந்த ஆண்டில் பயணிகளின் சராசரியை விட 74 சதவீதம் அதிகம். தற்போது 15,036 பேர் சராசரியாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பார்த்து செல்கின்றனர். இது வார இறுதி நாட்களில் 22,430 பயணிகள் பார்த்து செல்கின்றனர்


இதுவரை 30,90,723 சுற்றுலா பயணிகள் சர்தார் வல்லபாய் படேல் சிலையை பார்த்துள்ளனர். இதன்மூலம் 55.77 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.


Next Story