Top
undefined
Begin typing your search above and press return to search.

மினி லாரி மோதி வங்கி தேர்வு எழுத சென்ற மாணவி, தந்தையுடன் பலி! விருத்தாசலத்தில் பரிதாபம்!

மினி லாரி மோதி வங்கி தேர்வு எழுத சென்ற மாணவி, தந்தையுடன் பலி! விருத்தாசலத்தில் பரிதாபம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 10:56 AM GMT


விருத்தாசலம் ஆயர்மடத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40), அவரது மகள் திவ்யபிரியா (வயது 19 ) இன்று நடைபெறும் வங்கி தேர்வு எழுத திருச்சி எம்.ஏ.எம் கல்லூரிக்கு செல்வதற்காக இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் விருத்தாசலத்திலிருந்து வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்


ஏ.சித்தூர் சர்க்கரை ஆலை அருகே சென்று கொண்டிருந்த போது ,கோழி ஏற்றி வந்த லாரி வேல்முருகன் வண்டி மீது மோதியது இதில் தூக்கிவீசப்பட்ட தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், கோழி ஏற்றி சென்ற மினி லாரி நிற்காமல் சென்றுவிட்டது.





இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் , திவ்யபிரியா உடல்களை பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய மினி லாரியை தேடி வருகின்றனர்.


விருத்தாசலம், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ, சித்தூர் சர்க்கரை ஆலை அருகே ஒரே இடத்தில் அடிக்கடி விபத்து. நடக்கிறது இது குறித்து நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளுமா.


Next Story