Top
undefined
Begin typing your search above and press return to search.

சபரிமலைக்கு செல்ல முயன்ற பிந்து மீது மிளகாய் ஸ்பிரே அடித்த, பத்மநாபனுக்கு சிறப்பான வரவேற்பு! வைரலானது வீடியோ!

சபரிமலைக்கு செல்ல முயன்ற பிந்து மீது மிளகாய் ஸ்பிரே அடித்த, பத்மநாபனுக்கு சிறப்பான வரவேற்பு! வைரலானது வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 12:18 PM GMT


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்வதில்லை. இதை நீண்ட காலமாக ஐயப்ப பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர்.


இந்த நிலையில், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு கேரள கம்யூனிஸ்ட் பிணராய் விஜயன் அரசு, இந்து மத நம்பிக்கை இல்லாத, மாற்று மதத்தைச் சேர்ந்த சிலரை சபரிமலைக்கு அனுப்ப முயற்சி செய்தது. இதனால் இந்துக்கள் கொதித்து எழுந்தனர்.


இதனைத்தொடர்ந்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்த ஆண்டு சபரிமலைக்கு பெண்களை அனுப்பும் புரட்சிகர திட்டத்தை பிணராய் விஜயன் அரசு கைவிட்டது.





இந்த நிலையில், கடந்த முறை சபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று மல்லுக்கட்டிய சில பெண்கள், இந்த ஆண்டும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.


இதனை மீறி, சபரிமலைக்கு செல்ல முயன்ற பிந்து மீது, பத்மநாபன் என்ற ஐயப்ப பக்தர் மிளகாய் ஸ்பிரே அடித்து அங்கிருந்து துரத்தியடித்தார்.


இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பத்மநாபன், பத்தனம்திட்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


அவர் இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அவருக்கு ஐயப்ப பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கற்பூர தீப ஆராதனை செய்தும், மலர் தூவியும், பொன்னாடை அணிவித்தும், ஜெயில் வாசலில் பத்மநாபனுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Next Story