Top
undefined
Begin typing your search above and press return to search.

புத்தகம் மட்டுமா அழகு..? புத்தக நிலையங்களும் தான்! உலகின் அழகான புத்தக நிலையங்கள்!

புத்தகம் மட்டுமா அழகு..? புத்தக நிலையங்களும் தான்! உலகின் அழகான புத்தக நிலையங்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 2:46 AM GMT


1. அட்லாண்டிஸ் புக்ஸ், சண்டோரினி


புத்தகங்களின் சொர்கம். சண்டோரினி எனப்படும் இடத்தில் கிரிக் தீவில் அமைந்துள்ளது. சூரிய அஸ்தமனத்திற்க்கு பின் மத்தியதரை கடலை கண்டு ரசித்தவாரே படிப்பதற்க்கு ஏதுவாக இந்த புத்தக கடையின் பால்கனிகள் மாலையில் திறந்திறப்பதே இதன் தனி சிறப்பு.





2. டவுண்ட் புக்ஸ், லண்டன்
இது ஒரு தொடர் சங்கிலி நிறுவனம். 1990 இல் ஜேம்ஸ் டவுண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய கிளை மெர்லி போர்ன் ஹை வீதியில் அமைந்துள்ளது. இங்கு பணிபுரிவர்கள் அனைவரும் இலக்கியம், வரலாறு என புத்தகம் சார்ந்த அனைத்து அறிவையும் பெற்ற அனுபவசாலிகளே!!





3. செலக்ஸி புக்ஸ்டோர், ஹாலந்த்
இது பழமையான் கிருஸ்த்துவ அலையத்தில் உருவாகப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக விசாலமான இடமும் வெளிச்சமும் கிடைப்பது இதன் தனி சிறப்பு





4. செக்ஸ்பியர் அன்ட் கம்பெனி, பாரிஸ்
இந்த புத்தக கடை முழுவதும் விளிம்புகளால் ஆனது. அந்த விளிம்புகள் அனைத்தும் புத்தக குவியல்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கன் ஜார்ஜ் வைட்மென் என்பவரால் 1951 இல் துவங்கப்பட்டது.





5. லிவேரியா லெல்லோ, போர்டோ
புத்தகங்களால் அலங்கரிக்கப்பட்ட இதன் சுழல் படிக்கட்டே இதன் அழகை மற்ற புத்தக கடைகளிலிருந்து வித்தியாசப்படுத்தி காட்டும் சிறப்பம்சம்.





6. லிபேரியா அக்குவா அல்டா, வெனிஸ்
இதன் சரியான அகராதி விளக்கம் "நீரில் அமைந்த புத்தக கடை" என்பதே. வெள்ளம் ஏற்பட்டால் புத்தகங்களை உயரமான அலமாரிகளுக்கும் குளிக்கும் தொட்டிகளிலும் பத்திரப்படுத்திவிடுவார்களாம்.






7. கிட்ஸ் ரிபப்ளிக், பீஜிங்
இந்த வண்ணமயமான புத்தக கடை 2005இல் குழந்தைகளுக்கான புத்தக விற்பனையை மையமாக கொண்டு துவங்கப்பட்டது. குழந்தைகளின் கற்பனை திறன் பெருகும் வண்ணம் இந்நிறுவனத்தின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.





8. எல் பென்டுலொ, மெக்ஸிக்கோ சிட்டி
இயற்கையால் சூழப்பட்ட புத்தக மையம். வாடிக்கையாளர்கள் வாசித்து முடித்தவுடன் அவர்களை குதூகலப்படுத்த இசை, காமெடி, காபி என பல அம்சங்களை உள்ளடக்கியது.





9. எல் எடினோ, ஏய்ர்ஸ்
இந்த புத்தக நிலையம் 1919இல் கட்டப்பட்டது. பின்பு 1929இல் இதை திரையரங்கமாக மாற்றினார்கள். மீண்டும் 2000 இல் புதுப்பொலிவுடன் வருடத்திற்க்கு ஒரு மில்லியன் வருகையாளர்களை கொண்ட புகழ்பெற்ற புத்தக நிலையமாக மாற்றம் கொண்டது.




Next Story