Top
undefined
Begin typing your search above and press return to search.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: பளுதூக்கும் பிரிவில் தமிழக பெண் சப்- இன்ஸ்பெக்டருக்கு முதல் பரிசாக தங்கப்பதக்கம்..!

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: பளுதூக்கும் பிரிவில் தமிழக பெண் சப்- இன்ஸ்பெக்டருக்கு முதல் பரிசாக தங்கப்பதக்கம்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Dec 2019 10:39 AM GMT


13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாள நாட்டில் காத்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். 110 தங்கம் உள்பட 214 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது .


நீச்சல் போட்டியில் பேக்ஸ்ட்டோக், ஃபிரீ ஸ்டைல், பிரஸ்ட்ரோக் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களைகுவித்தனர். 50 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஜெயவீனா என்பவர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.


மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர்களான சத்யவர்த் காடியன், சுமித் மாலிக், இந்திய வீராங்கனைகளான குர்ஷன்பிரீத் கவுர், சரிதா மோர் தங்கப்பதக்கங்களை வென்றனர்.


பளுதூக்குதலில் 81 கிலோ பிரிவில் ஸ்ரீஸ்தி சிங் என்பவரும் , 87 கிலோ தூக்கும் பிரிவில் தமிழக வீராங்கனை அனுராதா ஆகியோர் தங்கப்பதக்கத்தைவென்றனர். அனுராதா புதுக்கோட்டை நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர். தஞ்சை மாவட்டம் தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்ததாக நேபாளம் 2- வது இடத்திலும், இலங்கை 3- வது இடத்திலும் உள்ளன.


Next Story