Kathir News
Begin typing your search above and press return to search.

உன்னாவ் சம்பவத்தில் கொடூர மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 இலட்சம் மற்றும் இலவச வீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு !

உன்னாவ் சம்பவத்தில் கொடூர மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 இலட்சம் மற்றும் இலவச வீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு !

உன்னாவ் சம்பவத்தில் கொடூர மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 இலட்சம் மற்றும் இலவச வீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Dec 2019 10:53 AM GMT


உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரில் 5 பேரால் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி, தீ வைத்து எரிக்கப்பட்டார். அவர் டெல்லி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் 90 மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.


நேற்றே பெண்னின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் இன்னும் உடலை அடக்கம் செய்யவில்லை. முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்கள் குடும்பத்தினரை நேரில் வந்து சந்திக்க வேண்டும், அதுவரை நாங்கள் அடக்கம் செய்யமாட்டோம் என மறுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக அந்த குடும்பத்து வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அந்த குடும்பத்துக்கு வீடு கட்டித்தரவும் உறுதி அளித்துள்ளார்.


இந்தநிலையில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி எரித்துக்கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,


முதல்வர் ஆதித்யநாத் எங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும். என் சகோதரிக்கு நேர்ந்த கொடுமைக்கு என்ன நீதி கிடைக்கும் என்பது குறித்து ஒரு முடிவைத் தெரிவிக்க வேண்டும். அவர் இங்கு வரும் வரை சகோதரியின் உடலை தகனம் செய்ய மாட்டோம். மேலும், தனக்கு அரசு வேலையும் தர வேண்டும் என்றார். எல்லாவற்றையும் விட நீதி முக்கியமானது என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.




https://www.opindia.com/2019/12/unnao-rape-murder-25-lakh-compensation-house-up-govt/



Next Story
கதிர் தொகுப்பு
Trending News