Top
undefined
Begin typing your search above and press return to search.

பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - இந்திய பெருங்கடல் பகுதியில் மீண்டும் சீன அச்சுறுத்தல்.!

பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - இந்திய பெருங்கடல் பகுதியில் மீண்டும் சீன அச்சுறுத்தல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2019 2:55 AM GMT


இந்திய பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் நுழைந்த சீன கப்பலை இந்திய கடற்படை தடுத்து பின்வாங்கச்செய்தது.  இந்த சம்பவம் சீனாவின் இந்தியாவை அச்சுறுத்தும் கடல் ஆக்ரமிப்பு திடடம் உயிர்ப்புடன் இருப்பதை காட்டுகிறது. 


சீனா தனது கடல் எல்லைகளை
விரிவுபடுத்தும் திட்டத்தை 2008 ஆம் ஆண்டிலிருந்தே
செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை சுற்றி இலங்கையில்
ஹம்பன்தோட்டாவிலும் பாகிஸ்தான துறைமுகமும் இந்திய நிலப்பரப்பை வளைத்து
அமைந்திருக்கிறது, இலங்கையை
பொறுத்தவரை கோத்தபாயவின் கட்சி நம்முடன் நட்புறவுடன் இருந்த போதும் இந்தியவை விட
சீன இலங்கையில் பொருளாதார ரீதியாக நிறய முதலீடுகளையும் பொருளாதார உதவிகளையும் செய்திருக்கிறது. பாக்கிஸ்தான் ஏற்கனவே சீனாவின் நட்பு நாடாக
இருக்கிறது, இந்த நிலையில்
இந்திய கடற்படையின் வலிமை என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கடற்படை
நாள் நிகழ்ச்சியில் பேசிய கப்பற்படை தளபதி கரம்வீர் சிங் இந்திய கடற்படையை
வலிமை படுத்தும் முக்கியத்துவத்தை பற்றி பேசினார், இதற்க்கு போர்க்கப்பல்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
மற்றும் கப்பல்களை நவீனப்படுத்துதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்
என்று அவர் பேசினார். மற்ற நாடுகளை காட்டிலும் கிழக்காசியாவில் சீனாவின் ஆக்ரமிப்பு மனநிலை இந்தியாவிற்கு மிகப்பெரிய
ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது,

கடல் எல்லைகளை அவர்கள் கடல் எல்லைகள் என்று சொல்லுவதில்லை, கடற்பரப்பை “அவர்கள் எல்லை விரிவாக்கப்பட்ட நீல மண்” என்று சொல்லுகின்றனர். தரை வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கும்
ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் நிலத்தில்
போடம்படும் சாலை ஒருபக்கம் என்றால் கடல் வழியாக ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு
மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் திட்டத்தியும் சீன வகுத்து அதற்காக உழைத்து வருகிறது, இதற்க்கு தென் கிழக்கு நாடுகளில் எந்த எதிர்ப்பும் எல்லை, அனால் இந்தியாவும் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் பகுதிகள் தான்
அதற்க்கு தடையாக இருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தை போல் அந்தமான்
நிகோபரையும் சீன தன்னைக்காக சொந்தம் கொண்டாடுகிறது, இந்நிலையில் தென் கடல்
பகுதிகளில் குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியை இந்திய தன்னுடைய முழு
கட்டுப்பாட்டில் வைத்திருக்க வலிமையான கடற்படையும் தென் கிழக்கு நாடுகளை
இந்தியாவும் ஒத்துழைக்க வைக்கும் திட்டங்களும் தேவை.


Next Story