Top
undefined
Begin typing your search above and press return to search.

மக்களுக்காக மனைவி செய்த தியாகம் - கணவருக்கு உலகின் உயரிய விருது கொடுத்து கௌரவப்படுத்திய இந்திய அரசு.!

மக்களுக்காக மனைவி செய்த தியாகம் - கணவருக்கு உலகின் உயரிய விருது கொடுத்து கௌரவப்படுத்திய இந்திய அரசு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2019 3:43 AM GMT


செவிலியர் தினத்தை முன்னிட்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது 36 பேருக்கு வழங்கப்பட்டது. விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். சில வருடங்களுக்கு மும்பு கேரளாவின் லினி சஜீஸ் என்கிற செவிலியர் நிபா வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தபோது அந்த வைரஸ் தாக்கப்பட்டு மரணமடைந்தார், அவருக்கு இந்த விருதை வழங்கி அரசு கௌரவித்தது, இந்த விருதை அவர் கணவர் பெற்றுக்கொண்டார். உலக சுகாதார அமைப்பு 2020 ஐ செவிலியர்கள் மற்றும் தாதிகளின் ஆண்டாக அறிவித்திருக்கிறது.


மேலும் இந்த 2020 ஆவது ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்து 200 ஆண்டுகள் பூர்த்தி ஆகிறது. இந்த விருதை இந்திய அரசு 1973 முதல் வழங்க தொடங்கியது, செவிலியராக நோயாளிகளை கவனித்து கொள்வதில் ஒப்பற்ற சேவை ஆற்றிய செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த செவிலியரான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நவீன தாதியால் முறையை உருவாக்கியவர். போரில் காயம்பட்டவர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு கவனித்து வந்தவர். செவிலியர்களுக்கான பயிற்சிப்பள்ளியையும் இவரே முதலில் தொடங்கினார். ருசியா, பிரான்ஸ் மற்றும் ஓட்டோமான் பேரரசுகளுக்கு இடையே நடந்த கிரிமியா போரில் தனது மருத்துவ பங்களிப்பின் மூலம் புகழ் பெற்றார்.


Next Story