Top
undefined
Begin typing your search above and press return to search.

இது எவ்வளவு பெரிய 'சென்சிடிவ்' விஷயம் தெரியுமா.? ஹைதராபாத் என்கவுண்டர் விவகாரத்தில் ஊடகங்கள் செய்யும் தவறு.!

இது எவ்வளவு பெரிய

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2019 3:37 AM GMT


நீண்ட நாட்களுக்கு பிறகு காவல் துரை ஆந்திராவில் என்கௌண்டேர் ஏற்படுத்திய மரணங்கள் குறித்து விவாதம் கிளம்பி உள்ளது.   வழக்கமாக இது போன்ற சம்பவங்களுக்கு பிறகு மனித உரிமைகள் அமைப்பு தீவிரமாக களத்தில் இறங்கி விசாரணையை முடுக்கி  விடும், பெருமபாலும் இதில் காவல் துறை பக்கமே சாட்சியங்கள் வலுவாக இருக்கும், இந்த மனித உரிமை ஆணையத்தின் விசாரணையால் பெரிதாக எதுவும் செய்து விட முடியாது, இந்த சூழ் நிலையில் பத்திரிகைகளுக்கு இருக்கும் கடமை என்ன வென்றால் "என்கவுண்டர் செய்யப்பட்டார்" என்பதோ “போலீஸ் என்கவுண்டர்”  செய்தது என்பது போன்ற வார்த்தை பிரயோகங்களே தவறானது, என்பதை பொது மக்களுக்கு உணர்த்த வேண்டும். அதை எந்த காவல் துறையினரும் பயன்படுத்த மாட்டார்கள்.  அனால் இன்று சமூக வலை தளங்கள் சர்வ சாதாரணமாக இந்த வார்த்தையை கையாளுகிறார்கள்.


இந்தியாவில் என்கவுண்டருக்கு என்று சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது, 1990 களில் மும்பை நகரத்தின் தாதாக்களின்
எதிர் எதிர் அணியில் இருக்கும் கூலிப்படையினர் சர்வ சாதாரணமாக துப்பாக்கிகளுடன் மோதிக்கொள்வார்கள். தாவூத் இப்ராஹிம் அருண் கவாலி போன்ற தாதாக்களின் அணியினர் இடையே தினமும் ஒரு மோதல் வெடிக்கும், இவர்களில் சிலர் AK 47 ண்களுடன் தெருவில் வலம்
வருவதுண்ண்டு.
இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மும்பை காவல் துறை தயா நாயக் என்கிற சப் இன்ஸ்பெக்ட்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து இவர்களை கட்டுப்படுத்தியது, தயநாயகின் “ஸ்கோர் கார்டில்” மட்டும் என்கவுண்டர் மரணங்கள் 170 ற்கும் மேல் போகும் !!! ஏதோ வேட்டையாடுவது போல் இவர்கள் நடத்திய என்கவுண்டர் கள்
அன்றைய நாட்களில் மிக பிரபலம். தமிழகத்தின் ட ஸ் பி வெள்ளை துறை இது போன்ற நடவடிக்கைகளில் ஸ்பேசியலிஸ்ட் ஆகா கருதப்படுகிறார் !!! காவல் துறையை பொறுத்த வரை அவர்கள் பணி குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி தருவதுதான். தண்டனையை தரும் உரிமையை இந்தியா அரசியல் சட்டம் நீதிமன்றத்திடமே கொடுத்திருக்கிறது.
அனால் இது போன்ற சம்பவங்கள் சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது, அந்த மாதிரி நேரங்களில் சந்தேகத்திற்க்கு இடமளிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காவல் துரையின் பொறுப்பான பணிகளில் ஒன்று. மேலும் இது பற்றி பேட்டி தரும்போது கூட அவர்கள் எச்சரிக்கையாக வார்த்தை பிரயோகம் செய்ய வேண்டும்...2002-3 ஆம் ஆண்டு சென்னையில் பிரபல ரௌடி வீரமணி கொல்லப்பட்ட பொது அன்று கமிஷனராக இருந்த விஜய் குமார் ஒரு பேட்டியில் "நாங்கள் துப்பாக்கிகளை அலங்காரத்துக்காக வைத்திருக்கவில்லை" என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசியது பெரும் எதிர்ப்பை சந்தித்தது, இந்த சம்பவதரிக்கு பிறகுதான் அவர் வீரப்பன் வேட்டையில் இருந்த எஸ் டி எப் இற்கு மாற்றப்பட்டார். பொதுமக்களுக்கும் இந்த “என்கவுண்டர்” பற்றிய “சென்சிட்டிவிட்டியை” புரியவைக்க வேண்டியது பத்திரிகைகள் கடமை, சர்வசாதாரணமாக இந்த வார்த்தையை ஒரு போலீஸ் அதிகாரியுடன் சேர்த்து பயன்படுத்த கூடாது. சில வருடங்களுக்கு முப்பு கோவையில் நடந்து ஒரு நகைச்சுவையான சம்பவம். திரு சைலேந்திர பாபு கமிஷனராக இருந்த போது முஸ்கன் ரித்திக்கின் கொலை குற்றவாளிகள் சுடப்பட்டார்கள், அதற்க்கு பிறகு சைலேந்திர பாபுவுக்கு போஸ்டர் அடித்து !!!! அவருக்கு பூங்கொத்து கொடுக்க தன்னார்வ அமைப்புகள் நீண்ட வரிசையில் காத்திருந்தது, மிரண்டு போன அவர், எல்லாரையும் திருப்பி அனுப்பி விட்டு உடனடியாக எல்லா போஸ்டர்களையும் கிழிக்க உத்தரவிட்டார் !


Next Story