Top
undefined
Begin typing your search above and press return to search.

பணமோசடி விவகாரத்தில் தப்பி ஓடிய 27 பேரில் 7 பேர் மீது பொருளாதார குற்றவாளிகள் சிறப்பு சட்டம் - நீரவ் மோடி மீது பாய்ந்த நீதிமன்ற உத்தரவு!

பணமோசடி விவகாரத்தில் தப்பி ஓடிய 27 பேரில் 7 பேர் மீது பொருளாதார குற்றவாளிகள் சிறப்பு சட்டம் - நீரவ் மோடி மீது பாய்ந்த நீதிமன்ற உத்தரவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2019 3:08 AM GMT


பஞ்சாப் தேசிய வங்கியில் பண முறைகேடு செய்து லண்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடியை பொருளாதார குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. விஜய் மல்லையாவிற்கு அடுத்தபடியாக பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் 2008 படி தலைமறைவாக இருக்கும் பொருளாதார குற்றவாளியாக நீரவ் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். நீரவ் மோடி மற்றும் அவர் உறவினர் கடந்த 2018 ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறினார். அமலாக்கத்துறையின் தகவலின்படி நீரவ் மோடி மற்றும் அவர் உறவினர் இருவரும் சேர்ந்து பஞ்சாப் தேசிய வங்கியில் 14000 கோடி பணமோசடி செய்துள்ளனர்.
இந்த சிறப்பு பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டம் 2018 இல் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாரண்ட் அனுப்பப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
இவர்கள் சொத்த்துக்களை பறிமுதல் செய்யவும் முடக்கி வைக்கவும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஒரு நீதிமன்றம் அதாவது சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டம் 2002 ன் படி அமைக்கப்பட்ட நீதிமன்றம் ஒருவரை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வழி செய்கிறது இந்த சட்டத்தின் படி பொருளாதார குற்றவாளியின் சொத்துக்களை முடக்கி வைத்து அவர் மீது குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவர் சொத்துக்களை. பறிமுதல் செய்து குற்ற நடவடிக்கைகளை தொடரலாம். சம்பந்தப்பட்ட குற்றவாளியை சிவில் உரிமைகளை கோரா தகுதியற்றவராகுதல், சட்டத்தின் படி பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களால் நிர்வகிக்கவும் அதை விற்கவும் அதிகாரியை நியமித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அமலாக்கத்துறையின் தகவலின் படி இதுவரை பணமோசடி விவகாரத்தில் தப்பி ஓடிய 27 பேரில் 7 பேர் மீது இந்த பொருளாதார குற்றவாளிகள் சிறப்பு சட்டம் அடிப்படியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதில் விஜய் மல்லையாவிற்கு அடுத்ததாக நீரவ் மோடி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.



Next Story