Top
undefined
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று துவக்கம்!

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று துவக்கம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2019 5:34 AM GMT


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள்  தவிர்த்து ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளன மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,மீதம் உள்ள 27 மாவட்டங்களில் தேர்தல்  நடத்தப்படுகிறது இதற்காண மனு தாக்கல் இன்று துவங்குகிறது, மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சித் தலைவர்கள் பதவிக்கு ஒன்றிய  அலுவலகங்களிலும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.



மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் 85 ஆயிரம் ரூபாய், உள்ளாட்சித் தலைவர் வேட்பாளர் 35 ஆயிரம் ரூபாய், ஊராட்சி வார்டு உறுப்பினர் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே தேர்தல் செலவுக்காக செய்ய வேண்டும், தேர்தல் முடிந்த 30 நாட்களுக்குள் செலவு விபரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story